Showing posts with label மனநோய். Show all posts
Showing posts with label மனநோய். Show all posts

Tuesday, August 16, 2011

மனநோயிக்கு மருந்தைவிட பக்குவமான அனுகுமுறையே தேவை.



எல்லோரும் ஒருவிதத்தில் ஒரு மனநோயாளிதான். யாருமே 100% மனநிலை சரி என்று சொல்ல இயலாது. கோபம், சந்தேகம், கவலை, தனிமை, காமம் போன்ற உணர்வுகள் அளவாக இருந்தால் தான் அவை குணங்கள் இல்லையேல் அது மனநோயிக்கான அறிகுறி. முதலிலே கவனிக்காமல் விட்டுவிட்டால், பிறகு சரி செய்வது மிகக் கடினம் ஆனாலும் சரிசெய்ய முடியும். வயதானவர்களையும், குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும் ஆட்கொள்ளுவது, தனிமையின் காரணமாக வரும் மன அழுத்தம். இதை ஆரம்ப கட்டத்திலே கவனித்து அவர்களை வேறுவிதமாக வேலையில் ஈடுபடச் செய்ய வேண்டும். வேலையில்லாமல் சும்மா இருந்தாலும் இத்தகைய மன அழுத்தம் வரும். தொடர்ந்து யோசிக்க நேரம் இல்லாமல் நாம் நமது வாழ்க்கையில் வேலைகளில் மூழ்கினால் மன அழுத்தம் வராது. அதே சமயத்தில், அதிக வேலையும் சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். எதுவுமே அளவாக இருத்தல் வேண்டும். எப்போது எல்லை மீறுகிறதோ அப்போது தேவையான நடவடிக்கையை நாம் எடுத்தால் இத்தகைய மன அழுத்தம் வராம் தப்பிக்கலாம். குடும்பத்தினரிடம் பொருள் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது பேசி, சிரித்து, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்துக்கென சிறிது நேரம் தினமும் ஒதுக்க வேண்டும். பணம், வேலை என்று அதிக நாட்டம் காட்டினால், பிற்பாடு கஷ்டம்தான்.

தற்போது ஒருவர் மன நிலை பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தால் இருக்கிறார் எனக் கொள்வோம். இதற்கு மருந்து மட்டுமே தீர்வு என நான் என் அனுபவத்தால் சொல்ல மாட்டேன். மன் நோயிக்கான மருந்து ஒருவர் எடுக்க ஆரம்பித்து விட்டால், பிறகு வாழ்நாள் முழுவதும் எடுக்க நேரும். இதைத்தான் மருத்துவர் வலியுருத்துவர். ஆனால், புத்திசாலித்தனமான அனுகுமுறை எதுவென்றால், மருந்துடன், நமது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவருடன் அன்பாக பேசி, அவர்களது நடவடிக்கைகளை உற்று கவனித்து, அவர்கள் மனம் கோனாமல், அதே சமயத்தில் அவர்களது தவறான நடவடிக்கைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இது மிகவும் கடினமானது. நிறைய நேரம் நம்மை கோபமுறச்செய்யும்படி அவர்கள் போக்கு இருக்கும். இருந்தாலும் கோபம் கொண்டால் பிரச்சினையை அதிகமாக்குமே தவிர பிரச்சினையை தீர்க்க உதவாது. ஒரு குழந்தை தவறு செய்தால் எப்படி தண்டிக்காமல், சிரித்தபடியே அவர்களுக்கு புத்தி சொல்கிறோமோ அது போலத்தான் மன நோயாளியை அனுக வேண்டும். இது என் வாழ்வில் நான் கடைபிடித்து அவ்வப்போது வெற்றியும் கண்டிருக்கிறேன். ஆனால் அதே சமயம், மருந்து அளவை குறைக்க வேண்டும். ஒரு மாத்திரையை அரை மாத்திரையாக குறைத்து ஒரு மாதம் அல்லது இரு மாதம் சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் தூக்கம் குறையும். பிற்பாடு சரியாகும். அதன் பிறகு அரையை காலாக குறைக்கலாம். இது ஒரு சிலருக்கு ஒத்துக்காது. அவர்களுக்கு அரையே தொடரலாம். இதை நாமாக செய்யாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நல்ல இசையைக் கேட்க வைக்கலாம். அவர்களை அவர்களது மனதில் உள்ளதை எழுதச் சொல்லி அதன் மூலம் அவர்களது மனப்போக்கை ஆராயலாம். சிலர் இதைச் செய்ய மறுக்கலாம். நாமும் எழுதுவது போல நடித்து, அவர்களையும் எழுதும்படி தூண்டலாம். இயற்கை சூழலில் அவர்களை வெளியே கூட்டி சென்று, அவர்களை மகிழ்ச்சியாக வைக்கலாம். முடிந்தால் யோகா போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு கூட்டிச் சென்று அவர்களால் முடிந்ததை செய்ய சொல்லலாம். கோயில்களுக்கு கூட்டிச் செல்லலாம். அதுவே, சில அப்பச்சியார்மடம் போன்ற பேயோட்டும் இடத்திற்கு கொண்டு சென்றால், பிரச்சினை அதிகமாகுமே தவிர அது நல்ல தீர்வாகாது. எனது கருத்து, இது மூட நம்பிக்கையே.

மன நிலை பேணுவோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
http://mananalathalam.blogspot.com
நன்றி:

சந்தேக நோயின் அறிகுறிகள்



நோய் ஆரம்பமானதும் ஏற்கெனவே அவர்களிடம் இருந்த குரோத மனப்பன்மை மேலோங்கி இருக்கும். இதனால் எல்லாவற்றிலும் சந்தேகம் கொண்டு இவர்களாகவே தப்பான அர்த்தம் கொள்வர். அடுத்தவர்களிடம் குற்றம் காணும் மன்ப்பாங்கு தான் இந்நோயின் முதல் அறிகுறியாகத் தோன்றும். நாளடைவில் மற்றாவர்களிடமிருந்து விலக ஆரம்பிப்பர். பொருத்தமில்லாமல் பேசுவதோடு அல்லாமல் மிகுந்த ஆவேச உணர்ச்சிகளுக்கும் ஆளாவர். ஆரம்பத்தில் ஏதாவது ஒன்றில் கொண்டிருந்த தவறான சந்தேகங்கள் பின் பரநது விரிந்து பல்வேறு வகையிலும் பூதகாரமாக வடிவெடுக்கும். மேலும் அச்சந்தேகங்கள் அடிக்கடி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும்.

தன்னைப் பிறர் துன்புறுத்துவதாக தவறாக நம்புவதே இந்நோயின் மிக முக்கியமான அறிகுறியாகும். இவர்கள் தனித்தே இருப்பர். ஆயினும் இவர்களுடைய சமூக உறவுகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களுடைய கூரிய அறிவுத்திறன் மங்காமலிருக்கும்.

பேச்சில் அர்த்தமற்ற புது வார்த்தகள் கலந்து வர ஆரம்பிக்கும். அவை பொருளற்றதாகவும் இருக்கும். எரிச்சல் உணர்வு, திருப்தியின்மை, வெறுப்புணர்ச்சி, சந்தேகம் நிறைந்த ஆவேசம் முதலியன இவர்களிடம் இருக்கும்.

மணிமாறன் 30 வயதானவர். இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள ஒர் தனியார் நிறுவனத்தில் உதவி கணக்கு தணிக்கையாளராக வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உண்டு. 2000ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனது நண்பருக்காக பிரச்சாரம் செய்ய ஏற்காடு சென்றார். அப்பொழுது இவர் சிறப்புடன் பணியாற்றுவதை கண்ட எதிர் அணியினர் இவரை கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டுவதாக இவருக்கு நினைப்பு வந்துள்ளது. உடனே அவர் சென்னை கிளைக்கு மாறுதல் வாங்கிவிட்டார். பின்னர் யாருடைய உதவியும் இல்லாமல் இவராகவே அந்த நினைப்பிலிந்து மீண்டு வந்துள்ளார். சென்னையில் அவருடைய பெண் உயர் அதிகாரியிடம் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். திடீரென்று ஒருநாள், மணிமாறன் தன் நண்பர்களிடம் அவரின் அலுவலகத்திலுள்ள இரண்டு ஆண் மேலதிகாரிகள் அந்த பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள் என்றும் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்ததாகவும் நம்பினார். இந்நிகழ்ச்சிக்குப்பின் அந்த பெண் அதிகாரியின் மேல் இவர் கொண்ட நட்பு காதலாக மாறிவிட்டது.

இதன் பிறகு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்து பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் இவருடைய பெயரும் தவறாக் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நினைத்து இவராகவே நிறைய துப்பறியும் செயல்களில் ஈடுபட்ட்ள்ளார். இவரின் பெண் நண்பருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டதாகவும் கூறினார். உடனே குடும்பத்தாரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு எய்ட்ஸ் இல்லை என உற்தி செய்யப்பட்டது. பின்னர் இவரை சென்னையில் கொலை செய்வதற்காக கூலிப்படையினர் பின் தொடர்வதாக நினைத்து, அதிலிருந்து தப்பிக்க வேலையை இராஜினாமா செய்துவிட்டு கோவை வந்துவிட்டார். கோவையிலும் கூலிப்படையினர் பின் தொடர்வதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நண்பர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார். திடீரென்று ஒருநாள் இதிலிருந்து விடுபடுவதற்காக இவர் யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, மும்பை சென்றுவிட்டார். கையில் இருந்த பணம் தீர்ந்தவுடன் கோவை வந்துவிட்டார். அவரிடம் நண்பர்கள் விசாரித்ததில் மும்பையில் என்ன செய்தேன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். பின்பு வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க ஆரம்பித்தார். வீட்டில் இருக்கும்போது எப்போதும் அதிகமாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். டி.வி.யில் உள்ள கதாபாத்திரங்களுடன் பேசியதாகவும் அவர்கள் தனக்கு பதில் அளித்ததாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். தன்னைப்பற்றிய தகவல்கள் அனத்தும் வேறு ஒர் ஊரில் டி.வி. சீரியலாக வெளிவருவதாகவும், தன்னை சாட்டிலைட் மூலம் கண்காணிப்பதாகவும் கூறியுள்ளார். கடைசியில் அவர் தான் நினைப்பது அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது என்றும் என்னை மட்டும் ஏன் கொலை செய்ய துடிக்கின்றனர் என நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது உறவினர்களால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மன நோய் எவ்வாறு ஆரம்பிக்கிறது?



36 வயதினையுடைய சுந்தரம், உயர்கல்விகள் பல பயின்று, தனியார் நிறுவனம் ஒன்றில் மிக உயர்ந்த வேலையில் உள்ளவர். தனியான மரியாதையான அலுவலகம், சொகுசு பங்களா, கார், வீடு, வேலை செய்வதற்கான பணியாட்கள், எந்த சிக்கலும் இல்லாத வாழ்க்கை, அமைதியான குடும்பம், நல்ல நண்பர்கள், வாழ்க்கையில் எந்த வித சோகத்தையும், வருத்ததையும் பார்த்திராதவர், மிகுந்த செல்வந்தர், அலுவகத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்கக் கூடியவர். ஒரு நாள் திடீரென்று அவர் காதில் மாயக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இது அவரது கவனத்தை சிதற வைத்தது. மிக எளிதான வேலைகளையும் தவறாக, குறைபாடுகளுடன் செய்ய ஆரம்பித்தார். அந்த குரல்கள் அவரின் எண்ணங்கள் மற்றும் செயல்களை விமர்சனம் செய்தது. இதனால், அவரது முகமும், உடலும் ஒருவித சோர்விலும், பதட்டத்திலும் வெளிற ஆரம்பித்தன.

அவர் காதில் குரல்கள் அதிகரிக்கவே வேலைக்கு செல்லாமலும் வெளியில் எங்கும் செல்ல விருப்பம் இல்லாமலும், வீட்டிலேயே முடங்கி கிடக்க ஆரம்பித்தார். அவர் ஆறு மாதத்தில் மிகவும் தளர்ந்து போய், அழுக்கான உடையை அணிந்து கொண்டு, முகச்சவரம் செய்யாமலும், எங்கோ ஓர் உலகத்தில் லயித்து, இயல்பு மீறி கிடந்தார். சிலர் மனநல மருத்துவரிடம் காண்பிக்க சொன்னனர். சுந்தரத்தின் பெற்றோர், குடும்பத்தின் பெருமை கூறி, எங்கள் குடும்பத்தில் மனநோய் வராது என்று கூறினர். சுந்தரத்தின் தங்கையின் நிச்சயதார்த்ததன்று, அவள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஊரார் சுந்தரத்தை கேலி செய்வர் என்று கருதி, அவரை வீட்டுக்குள் சிறை வைத்தனர். ஆனால் சுந்தரம் அதையும் மீறி, அங்கு வந்து, கூட்டத்தினரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் கேவலாமாக பேசியும், கைகளில் கிடைத்த பொருள்களை தூக்கி வீசியும், அங்குள்ள மனிதர்களை தாக்கவும் செய்தார். அவரது உறவினர்கள் அவரை கட்டிப் போட்டு, மனநல மருத்துவரிடம் சேர்த்தனர்.

சுந்தரத்திற்க்கு என்ன பிரச்சனை?
அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்?
இந்த பிரச்சினைகளில் இருந்து அவர் மீள் ஏதாவது வழிவகை உள்ளதா?
அவர் ஏன் மனநல மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டார்?

இதற்கான காரண்த்தைத் தெரிந்து கொள்ள மேலும் தொடர்ந்து இக்கட்டுரைகளைப் படியுங்கள்.

மனநோய் சில உரையாடல்கள்:



வீட்டில் அம்மா:

'டேய் சுந்தரம், என்னடா யோசனை, கொஞ்ச நேரமாகவே வீட்டு முகட்டையே முறைச்சு பார்த்துட்டிருக்கே....'
'ஒண்ணுமில்லேம்மா...'
'சரி சரி, மணி பத்தாகப் போகுது, சாப்பிட வாயேண்டா....
'இல்லேம்மா.., பசிக்கலை...'
'சரிடா, இராத்திரி சாப்பிடாம படுக்கக் கூடாது, கொஞ்சமாவது சாப்பிடு'
'வேனாம்மா, ஒரு தடமை சொன்னா கேட்க மாட்டியா?'
'வர வர நீ சின்ன குழந்த மாதிரிதான் அடம்பிடிக்கிறே'
'எனக்கு மனசு ரொம்ப குழப்பமாயிருக்கு'

அலுவலகத்தில் உதவியாளர்:

'சார்...?'
'என்ன ...?'
'சுந்தரம் சார், எதாவது பிரச்சினையா?'
'ம்..ம்ம்ம்... இல்லையே ஏன்?'
'காலையில் இருந்து யாரிடமும் முகம் கொடுத்து பேசாம இருக்கீங்க. இப்ப ஏதோ யோசனையில் லெட்டரை விட்டிட்டு டேபில் மேல கையெழுத்து போடுறீங்க. காலையில் இருந்து எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கீங்க'
'என்னை யாரோ பின் தொடர்கிறார்கள்...'
'யார் சார்..?'
'பேப்பர்ல கூட என்னைப்பத்தி எழுதறாங்க..'
'எந்த பேப்பர்லே சார்..?'
'எல்லா பேப்பர்லேயும், அங்கே பாருங்க என்னை பின் தொடர்ந்து கூட வர ஆரம்பிச்சிட்டாங்க...'
'சார் அவர்கள் யாரோ..'
'இல்லப்பா, என்னை ரேடியோ, டீவி மூலமாக வேவு பார்க்கிறாங்க. என்னை கொல்லப் பார்க்கிறாங்க'
'நீங்க எதோ குழம்பிப் போயிருக்கீங்க.. ஒரு வாரம் ரெஸ்ட் எடுங்க.. சரியாயிடும்.'

இந்த உரையாடல்கள் மூலம் சம்ப்ந்தப் பட்ட நபர் மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளது தெளிவாகிறது.