Showing posts with label மனச்சிதைவு நோய். Show all posts
Showing posts with label மனச்சிதைவு நோய். Show all posts

Tuesday, August 16, 2011

சாதாரண மனச்சிதைவு நோய்



இவ்வகை நோயாளிகளுக்கு நோயின் முதன்மையான அறிகுறிகளான சந்தேகம், மாயபுலன் உணர்வுகள் போன்ற அறிகுறிகள் காணப்படாது. மறைமுக அறிகுறிகளான சரிவர தன்னலம் பேணாமை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகி எப்பொழுதும் தனிமையே விரும்புதல், எந்த செயலிலும் விருப்பம் இல்லாமை போன்றவை காணப்படும். இந்த அறிகுறி மிகமெதுவாக மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் இயல்பினையுடையது. இதன் நோயாளிகளின் நடைமுறை வாழ்க்கை மற்றும் தொழில்திறன் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படும். இவர்களால் மற்றவர்கள் போல் இயல்பாக செயல்படமுடியாது. 

25 வயதான சுமதி, நகைப்பட்டறை தொழிலாளி, திடீரென்று அவரது பழக்கவழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டன. மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டு ஒதுங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். வீட்டில் யாருடனும் பேசாமலும் அமைதியாகவும், எந்த செயலிலும் விருப்பம் இல்லாமலும் இருந்தார். ஏன் என்று பெற்றோர் கேட்டால் சரியான பதிலை அவர் தராமல் தனிமையில் சிந்தித்த வண்ணம் இருந்தார். சில சமயங்களில் தானாகவே சிரிக்கவும் தனக்குள் முணுமுணுப்பதுவகாக இருந்தார். சில நாட்களாக வீட்டுக்குள் முடங்கியிருக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தாரின் ஆலோசனைப்படி திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்க்கு பிறகு சரியாக தூங்காமலும், எப்போதும் மிகவும் சோர்வாகவும் ஒருவித பதட்டத்துடனும் காணப்பட்டார். கணவரின் வீட்டில் புதிதாக திருமணம் ஆன பெண்தானே கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தனர். கருத்தரித்து ஒரு குழந்தையும் பெற்றார். குழந்தை பிறந்த பிறகும் அவரின் தொந்தரவுகள் அதிகமாகவும், பிறந்த குழந்தையைக்கூட கவனிக்கமலும், சரிவர குளிக்கமலும், சுத்தம் இல்லாமலும், அழுக்கு துணிகளை உடுத்திக்கொண்டு, தலையில் எண்ணெய் தடவாமலும் இருக்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் இந்த பிரச்சனைகள் அதிகமாகவே குடும்ப மருத்துவரால் மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய்



இவ்வகை நோயினால் பெரும்பாலும் நடுத்தர வயதினரே பாதிக்கப்படுகின்றனர். சுமார் 30 வயதுக்கு மேல்தான் இது அதிகமாக தோன்றுகிறது. இந்நோய்க்கு ஆட்பட்டவர்களிடம் தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்தமற்றும், உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்தத் தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் மிகக் கடினம். அந்த அளவிக்கு அவை ஆழமாக வேரூன்றி இருக்கும். இது தவிர போலிக்கண்ணோட்டமும், பொருத்தமற்றா தொடர்பற்ற பேச்சும், உணர்ச்சி மாறுபாடுகளும், எதிர்மறையான செயல்களும் இவர்களிடம் காணப்படும்.

நோய் தோன்றுவதற்கு முன் இவர்கள் கொண்டிருந்த குண இயல்புகளை ஆராய்ந்தால், இவர்களின் சமூக உறவுகள் மிகவும் குறை உடையனவாகவே இருந்திருப்பது தெரிய வரும். சாதாரணமாகவே அன்பு இல்லாதவர்களாகவும், மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமல் வெறுப்பு கொண்டு ஒதுங்கியும் வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான, முழுமையான, ஈடுபாடு கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர் போல் பட்டும் படாமலும் இருப்பர். எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுவதும், வாக்குவாதம் செய்யும் குணமும், அகம்பாவம், எதிர்ப்பு மனப்பான்மை, அலட்சியம், மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் மற்றும் நடத்தல் அகிய இயல்புகள் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சிலர் பகைமை உணர்வை மனதில் வைத்துக் கொண்டு வெளியே நண்பர்கள் போல் நடிப்பதும் உண்டு.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாகவே இருப்பர். ஏதாவது ஒரு வேலையிலும் இருப்பர். எனவே, இவர்களுடைய நடத்தை, குமரப்பருவ மற்றும் விறைப்புச்சார்ந்த நோயாளிகளைக் காட்டிலும் அதிகமாகவே வளர்ச்சி பெற்றிருக்கும். எனவே இவர்களுடைய நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் உணர்ச்சிப் பரிவர்த்தனைகள் முதலியவற்றில் அதிகமான அளவு பின்னடைவு இருக்காது.

குமரப் பருவ மனச்சிதைவு நோய்



நோயின் வகைகளும் அறிகுறிகளும்:

மனச்சிதைவ்வு நோயைப் பலவாறாக் வகைப்படுத்தினாலும் இந்த விவரங்கள் சுலபாமாகத் தெரிந்துகொள்ள ஏற்பட்ட மரபாகும்.ஒருவகையாக கருதப்பட்ட நோயாளி மற்றொரு வகைக்கு மாறுவதுண்டு.

குமரப் பருவ மனச்சிதைவு நோய்:

இவ்வகை நோய் குமரப்பருவத்தின் முதல் கட்டத்தில் சிறுகச்சிறுகத் தோன்றும். நோயாளி அநேகமாக மணமாகாதவராகவும், வேலையற்றவராகவும் இருப்பார். அவர் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அறிகுறிகள்:

இவர்களின் உணர்ச்சி, சிந்தனை மழுங்கியதாகவும் முரண்பாடனதாகவும் இருக்கும். அசட்டுத்தனம், பல்லிளிப்பு, பொருளற்ற புன்னகை, சிரிப்பு முதலியன இவர்களிடம் காணப்படும். கண்ணாடி முன் நின்று அடிக்கடி தன் அழகு பார்த்து சிரிப்பது இவர்களிடம் காணப்படும் அறிகுறியாகும். போலிக்கண்ணோட்டம், கற்பனை உலகில் சஞ்சரித்தல், தொடர்பற்ற தவறான நம்பிக்கைகள் முதலிய அறிகுறிகள் காணப்படும். மேலும் பேச்சு தொடர்பில்லாமலும், அர்த்தமற்றதும், மரபில் இல்லாத புதுபுது வார்த்தைகளை உபயோகிப்பர். இவர்களுடைய எழுத்தும், வரையும் படங்களும் பொருளற்றுக் காணப்படும். எவருடனும் உறவாடமல் தனித்து இருப்பர். பண்பியல் தொகுத்துச்சிதைந்து மனித இயல்புகளை இழந்து விடுவர். இதுவே மற்ற நோயாளிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடாகும்.

சிந்திக்கும் திறன் சீரழிவதால், பேச்சு பிறர் புரிந்து கொள்ளும் தன்மையை இழந்து மொழியில் இல்லாத ஓலிக் கூட்டகவே இருக்கும். கற்பனையில் தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் கட்டுக் கோப்பின்றி ஒப்பனைகளின்றி இருக்கும். மிகவும் இளம் வயதில் தோன்றும் இவ்வகை நோயுடையோர் உரிய தருணத்தில் மருத்துவம் பெற்றால் நல்ல பலங்களை எதிர்பார்க்கலாம்.

21 வயதுள்ள மூர்த்தி, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர். நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவர், சில நாட்களாக நண்பர்கள் அனைவருடனும் அடிக்கடி வாக்குவாதம் செய்தார். காரணமின்றி சிரித்துக் கொள்வார். அடிக்கடி கல்லூரி பெண்களிடம் பல்லிளிபது மற்றும் அசட்டுத்தனமாக ஏதாவது செய்து கொண்டிருந்தார். ஆன்மாவும், அறிவியலும் என்ற தலைப்பில் ஒருநாள் அவர் ஏதேதோ பேசவும், தத்துவங்கள் பேசவும் செய்தார். அர்த்தமில்லாத விஞ்ஞான கருத்துக்ளையும் சில அறிவியல் குறியீடுகளையும் பயன்படுத்தி பொருளற்ற வரைபடங்களை வரைந்தார். கூர்ந்து கவனித்தால் அவரது தத்துவங்களில் மற்றும் பேச்சில் எந்த அர்த்தமும் இருக்காது. அடிக்கடி க்ண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டார். வழக்கத்தில் இல்லாத புதுப்புது வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். பல சமயங்க்களில் அவர் பேசுவது ஒன்றும் சக மாணவர்களுக்குப் புரியவில்லை. இந்த நடவடிக்கைகள் அதிகமாகவே, ம்ன நல மருத்துவரிடம் அழைத்துவரப்பட்டார்.

மனச்சிதைவு நோய் சார்ந்த மூட நம்பிக்கைகள் மற்றும் காரணம்



மனச்சிதைவு நோய் சார்ந்த மூட நம்பிக்கைகள்:

இந் நோய்க்கு தெய்வங்களின் கோபமோ, பேய் பிசாசுகளின் ஆதிக்கமோ, மாய மந்திர, பில்லி சூன்ய செய்வினை போன்ற மர்மமோ, முன்னோர்களின் பாவமோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையோ காரணம் அல்ல. மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினால் இந்நோய் ஏற்படுகிறது. இது தான் அறிவியல் பூர்வ உண்மை. பலரும் பல விதமான ஆலோசனைகளை கூறலாம். ஆனால் தேர்ந்தெடுத்த மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதே புத்திசாலித் தனமாகும். இல்லையென்றால் குணமடைவது தாமதப்படுகிறது.

மனச்சிதைவு நோய்க்கான காரணம்:

உடலில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு இதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியும். ஆனால் மன நோய்க்கு மூலக்காரணத்தை உறுதியாக கூற இயலாது. சமீபத்திய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் மூளையில் ஏற்படும் சில இரசாயன மாறுதல்களினால் இந்நோய் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் உள்ள டோபமைன் என்ற வேதிப் பொருள் நரம்புகளின் சந்திப்பில் அதிகமாவதால் காதில் மாயக்குரல்கள் கேட்பது, அர்த்தமற்ற சநதேகம் மற்றும் தவறான எண்ணங்க்கள் உண்டாகின்றன. இந்நோய்க்கு தரப்படும் மருந்துகள், டோபமைன் என்ற வேதிப்பொருளை நரம்பு சந்திப்புகளில் குறைக்கின்றன. செரடோனின் எனும் மற்றொரு வேதிப்பொருள் முன்மூளை பகுதிகளில் உள்ளது. இந்த செரடோனின் மாற்றங்களினால் மனச்சிதைவு நோயாளிகளின் ஆளுமைத்திறன் பாதிக்கப்படுகிறது. ஆராய்ச்சிகள் மூலம், செரடோனின் ஏற்படுத்தும் மாற்றங்கள் பழைய இயல்பு நிலைக்கு திரும்ப காரணகாகின்றன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வெகு சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்நோய் ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவர் மன்ச்சிதைவு நோயினால் பாதிக்க்கப்பட்டு இருந்தால் இரத்த தொடர்பான உறவினர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெற்றோருக்கு 5% சகோதிரிகளுக்கு 9% குழந்தைகளுக்கு 12% முதல் 36% மற்ற உறவினர்களுக்கு 3% வாய்ப்புள்ளது.

வெகு நாட்கள் மது அருந்துவதாலும், கஞ்சா அபின் மற்றும் பல்வேறு வகையான போதைப்பொருள்களை உட்கொள்வதாலும் மூளை பாதிக்கப்பட்டு மனச்சிதைவு நோய் வர வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள சூழ்நிலை உகந்ததாக இல்லாவிடினும், பெரும் நஷ்டம், அவநம்பிக்கை, சமுதாயத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் போதும், மனக்கவலை ஏற்படும். அதனால் மனச்சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
நன்றி:
http://mananalathalam.blogspot.com

மனச்சிதைவு நோய் ஒர் அறிமுகம்



மனச்சிதைவு நோய், எல்லா நோய்களையும் போல் முறையாக சரியான சிகிச்சை மேற்கொண்டால் குணமாகும் நோய்தான்.மனச்சிதைவு நோயின் பாதிப்பு எந்த தரப்பினருக்கும் ஏற்படலாம். மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் சிந்திக்கும் தன்மை பழுது ஏற்பட்டு கட்டுப்பாடற்று செயல்படுவது மனச்சிதைவு நோய் ஆகும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் ஓரே மாதிரி பாதிப்புகள் காணப்படுவதில்லை. இவர்கள் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, நடைமுறை பழக்கவழக்கங்கள், பேச்சு, செயல்கள் ஆகியவற்றில் வித்தியாசமாகவும், சில நேரங்களில் விபரீதமாகவும் செயல்படுவர்.

மனச்சிதைவு நோய் ஆண், பெண், இன, மத, மொழி, சமுதாய கலாச்சார் பேதமின்றி அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும். பெரும்பாலும் 15 வயது முதல் 45 வயது வரை உள்ளோரை இது பாதிக்கும். உலகத்தில், 100ல் ஒருவருக்கு இது பாதிக்கப்படுகிறது. இவர்களில், பாதிப்புகள், அறிகுறிகளில், வேறுபாடு இருக்கும். சிலர் நோயின் தன்மையை உண்ராமல் இருப்பர். காலப்போக்கில் சரியாகிவிடும் என மருத்துவரை ஆலோசிக்காமல் இருந்தால், நோய் முற்றி தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்ப கால கட்டத்திலே மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வது நோயை கட்டுப்படுத்த உதவும். காலம் தாழ்த்தினால் நோய் முற்றி தீவிர பாதிப்புகளை விளைவிக்கும்.

மனச்சிதைவு நோயின் அறிகுறிகள்

மனச்சிதைவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி காரணம் இல்லாமல் கோபம், எரிச்சல் கொள்வர். கவனக்குறைவு அவர்களிடம் இருக்கும். தன் உணர்ச்சிகளை வெளிபடுத்த முடியாமல், தன் இயலாமையால் பட படப்புடனும், பயத்துடனும் இருப்பர். எதிலும் ஆர்வமின்றி, நம்பிக்கை இல்லாமலும் இருப்பர். எப்போதும் தனிமையையே விரும்புவர். ஏதோ யோசித்துக் கொண்டிருப்பர். சிலரிடம் வேலையில் அதிக வேகம் காணப்படும். சாதாரண வேலைகள் கூட தன்னால்தான் நடைபெறுகிறது என்றும், மற்றவர்களின் வேலைகளையும் தானே எடுத்து செய்வர். அமைதியாக இல்லாமல், ஏதாவது வாதம் செய்து கொண்டிருப்பர்.

இவர்கள் அர்த்தமற்ற தவறான நம்பிக்கை கொண்டவராகவும், சந்தேக எண்ணங்கள் உள்ளவராகவும் இருப்பர். தன் தாய் கூட உணவில் விஷம் கலந்து கொடுப்பதாகவும், மனைவியையும் சந்தேகிப்பார்கள். பொருள் இல்லாமல், பேசியதையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருப்பர். சரிவரத்தூக்கம் இல்லாமலும், எதிலும் விருப்பம் இல்லாமலும் இருப்பர். இவர்கள் பேசும் முறையில் சில தடுமாற்றங்கள் தென்படும். அவர்கள் பேசுவதை மற்றவர்கள் சரிவர புரிந்து கொள்ள முடியாது. அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமலும், நேரத்திற்க்கு சாப்பிடாமலும் இருப்பர். மேலும் சிலர், தானே கடவுள் என்றும், கடவுளின் அவதாரம் என்றும் உணர்வர். இந்த உலக இயக்கத்திற்க்கு தானே காரணம் என்றும், தன்னாலேயே எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணம் உடையவராகவும் இருப்பர்.
நன்றி:Muthukumar Arumugam