Tuesday, August 16, 2011

மனச்சிதைவு நோய் சார்ந்த மூட நம்பிக்கைகள் மற்றும் காரணம்



மனச்சிதைவு நோய் சார்ந்த மூட நம்பிக்கைகள்:

இந் நோய்க்கு தெய்வங்களின் கோபமோ, பேய் பிசாசுகளின் ஆதிக்கமோ, மாய மந்திர, பில்லி சூன்ய செய்வினை போன்ற மர்மமோ, முன்னோர்களின் பாவமோ, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையோ காரணம் அல்ல. மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினால் இந்நோய் ஏற்படுகிறது. இது தான் அறிவியல் பூர்வ உண்மை. பலரும் பல விதமான ஆலோசனைகளை கூறலாம். ஆனால் தேர்ந்தெடுத்த மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதே புத்திசாலித் தனமாகும். இல்லையென்றால் குணமடைவது தாமதப்படுகிறது.

மனச்சிதைவு நோய்க்கான காரணம்:

உடலில் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு இதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியும். ஆனால் மன நோய்க்கு மூலக்காரணத்தை உறுதியாக கூற இயலாது. சமீபத்திய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் மூளையில் ஏற்படும் சில இரசாயன மாறுதல்களினால் இந்நோய் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் உள்ள டோபமைன் என்ற வேதிப் பொருள் நரம்புகளின் சந்திப்பில் அதிகமாவதால் காதில் மாயக்குரல்கள் கேட்பது, அர்த்தமற்ற சநதேகம் மற்றும் தவறான எண்ணங்க்கள் உண்டாகின்றன. இந்நோய்க்கு தரப்படும் மருந்துகள், டோபமைன் என்ற வேதிப்பொருளை நரம்பு சந்திப்புகளில் குறைக்கின்றன. செரடோனின் எனும் மற்றொரு வேதிப்பொருள் முன்மூளை பகுதிகளில் உள்ளது. இந்த செரடோனின் மாற்றங்களினால் மனச்சிதைவு நோயாளிகளின் ஆளுமைத்திறன் பாதிக்கப்படுகிறது. ஆராய்ச்சிகள் மூலம், செரடோனின் ஏற்படுத்தும் மாற்றங்கள் பழைய இயல்பு நிலைக்கு திரும்ப காரணகாகின்றன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வெகு சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்நோய் ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவர் மன்ச்சிதைவு நோயினால் பாதிக்க்கப்பட்டு இருந்தால் இரத்த தொடர்பான உறவினர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெற்றோருக்கு 5% சகோதிரிகளுக்கு 9% குழந்தைகளுக்கு 12% முதல் 36% மற்ற உறவினர்களுக்கு 3% வாய்ப்புள்ளது.

வெகு நாட்கள் மது அருந்துவதாலும், கஞ்சா அபின் மற்றும் பல்வேறு வகையான போதைப்பொருள்களை உட்கொள்வதாலும் மூளை பாதிக்கப்பட்டு மனச்சிதைவு நோய் வர வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள சூழ்நிலை உகந்ததாக இல்லாவிடினும், பெரும் நஷ்டம், அவநம்பிக்கை, சமுதாயத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் போதும், மனக்கவலை ஏற்படும். அதனால் மனச்சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
நன்றி:
http://mananalathalam.blogspot.com

No comments:

Post a Comment