Tuesday, August 16, 2011

மனநோய் சில உரையாடல்கள்:



வீட்டில் அம்மா:

'டேய் சுந்தரம், என்னடா யோசனை, கொஞ்ச நேரமாகவே வீட்டு முகட்டையே முறைச்சு பார்த்துட்டிருக்கே....'
'ஒண்ணுமில்லேம்மா...'
'சரி சரி, மணி பத்தாகப் போகுது, சாப்பிட வாயேண்டா....
'இல்லேம்மா.., பசிக்கலை...'
'சரிடா, இராத்திரி சாப்பிடாம படுக்கக் கூடாது, கொஞ்சமாவது சாப்பிடு'
'வேனாம்மா, ஒரு தடமை சொன்னா கேட்க மாட்டியா?'
'வர வர நீ சின்ன குழந்த மாதிரிதான் அடம்பிடிக்கிறே'
'எனக்கு மனசு ரொம்ப குழப்பமாயிருக்கு'

அலுவலகத்தில் உதவியாளர்:

'சார்...?'
'என்ன ...?'
'சுந்தரம் சார், எதாவது பிரச்சினையா?'
'ம்..ம்ம்ம்... இல்லையே ஏன்?'
'காலையில் இருந்து யாரிடமும் முகம் கொடுத்து பேசாம இருக்கீங்க. இப்ப ஏதோ யோசனையில் லெட்டரை விட்டிட்டு டேபில் மேல கையெழுத்து போடுறீங்க. காலையில் இருந்து எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கீங்க'
'என்னை யாரோ பின் தொடர்கிறார்கள்...'
'யார் சார்..?'
'பேப்பர்ல கூட என்னைப்பத்தி எழுதறாங்க..'
'எந்த பேப்பர்லே சார்..?'
'எல்லா பேப்பர்லேயும், அங்கே பாருங்க என்னை பின் தொடர்ந்து கூட வர ஆரம்பிச்சிட்டாங்க...'
'சார் அவர்கள் யாரோ..'
'இல்லப்பா, என்னை ரேடியோ, டீவி மூலமாக வேவு பார்க்கிறாங்க. என்னை கொல்லப் பார்க்கிறாங்க'
'நீங்க எதோ குழம்பிப் போயிருக்கீங்க.. ஒரு வாரம் ரெஸ்ட் எடுங்க.. சரியாயிடும்.'

இந்த உரையாடல்கள் மூலம் சம்ப்ந்தப் பட்ட நபர் மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளது தெளிவாகிறது.

No comments:

Post a Comment