Tuesday, August 16, 2011

மனநோயிக்கு மருந்தைவிட பக்குவமான அனுகுமுறையே தேவை.



எல்லோரும் ஒருவிதத்தில் ஒரு மனநோயாளிதான். யாருமே 100% மனநிலை சரி என்று சொல்ல இயலாது. கோபம், சந்தேகம், கவலை, தனிமை, காமம் போன்ற உணர்வுகள் அளவாக இருந்தால் தான் அவை குணங்கள் இல்லையேல் அது மனநோயிக்கான அறிகுறி. முதலிலே கவனிக்காமல் விட்டுவிட்டால், பிறகு சரி செய்வது மிகக் கடினம் ஆனாலும் சரிசெய்ய முடியும். வயதானவர்களையும், குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையும் ஆட்கொள்ளுவது, தனிமையின் காரணமாக வரும் மன அழுத்தம். இதை ஆரம்ப கட்டத்திலே கவனித்து அவர்களை வேறுவிதமாக வேலையில் ஈடுபடச் செய்ய வேண்டும். வேலையில்லாமல் சும்மா இருந்தாலும் இத்தகைய மன அழுத்தம் வரும். தொடர்ந்து யோசிக்க நேரம் இல்லாமல் நாம் நமது வாழ்க்கையில் வேலைகளில் மூழ்கினால் மன அழுத்தம் வராது. அதே சமயத்தில், அதிக வேலையும் சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். எதுவுமே அளவாக இருத்தல் வேண்டும். எப்போது எல்லை மீறுகிறதோ அப்போது தேவையான நடவடிக்கையை நாம் எடுத்தால் இத்தகைய மன அழுத்தம் வராம் தப்பிக்கலாம். குடும்பத்தினரிடம் பொருள் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது பேசி, சிரித்து, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்துக்கென சிறிது நேரம் தினமும் ஒதுக்க வேண்டும். பணம், வேலை என்று அதிக நாட்டம் காட்டினால், பிற்பாடு கஷ்டம்தான்.

தற்போது ஒருவர் மன நிலை பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்தால் இருக்கிறார் எனக் கொள்வோம். இதற்கு மருந்து மட்டுமே தீர்வு என நான் என் அனுபவத்தால் சொல்ல மாட்டேன். மன் நோயிக்கான மருந்து ஒருவர் எடுக்க ஆரம்பித்து விட்டால், பிறகு வாழ்நாள் முழுவதும் எடுக்க நேரும். இதைத்தான் மருத்துவர் வலியுருத்துவர். ஆனால், புத்திசாலித்தனமான அனுகுமுறை எதுவென்றால், மருந்துடன், நமது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவருடன் அன்பாக பேசி, அவர்களது நடவடிக்கைகளை உற்று கவனித்து, அவர்கள் மனம் கோனாமல், அதே சமயத்தில் அவர்களது தவறான நடவடிக்கைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இது மிகவும் கடினமானது. நிறைய நேரம் நம்மை கோபமுறச்செய்யும்படி அவர்கள் போக்கு இருக்கும். இருந்தாலும் கோபம் கொண்டால் பிரச்சினையை அதிகமாக்குமே தவிர பிரச்சினையை தீர்க்க உதவாது. ஒரு குழந்தை தவறு செய்தால் எப்படி தண்டிக்காமல், சிரித்தபடியே அவர்களுக்கு புத்தி சொல்கிறோமோ அது போலத்தான் மன நோயாளியை அனுக வேண்டும். இது என் வாழ்வில் நான் கடைபிடித்து அவ்வப்போது வெற்றியும் கண்டிருக்கிறேன். ஆனால் அதே சமயம், மருந்து அளவை குறைக்க வேண்டும். ஒரு மாத்திரையை அரை மாத்திரையாக குறைத்து ஒரு மாதம் அல்லது இரு மாதம் சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் தூக்கம் குறையும். பிற்பாடு சரியாகும். அதன் பிறகு அரையை காலாக குறைக்கலாம். இது ஒரு சிலருக்கு ஒத்துக்காது. அவர்களுக்கு அரையே தொடரலாம். இதை நாமாக செய்யாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நல்ல இசையைக் கேட்க வைக்கலாம். அவர்களை அவர்களது மனதில் உள்ளதை எழுதச் சொல்லி அதன் மூலம் அவர்களது மனப்போக்கை ஆராயலாம். சிலர் இதைச் செய்ய மறுக்கலாம். நாமும் எழுதுவது போல நடித்து, அவர்களையும் எழுதும்படி தூண்டலாம். இயற்கை சூழலில் அவர்களை வெளியே கூட்டி சென்று, அவர்களை மகிழ்ச்சியாக வைக்கலாம். முடிந்தால் யோகா போன்ற பயிற்சி வகுப்புகளுக்கு கூட்டிச் சென்று அவர்களால் முடிந்ததை செய்ய சொல்லலாம். கோயில்களுக்கு கூட்டிச் செல்லலாம். அதுவே, சில அப்பச்சியார்மடம் போன்ற பேயோட்டும் இடத்திற்கு கொண்டு சென்றால், பிரச்சினை அதிகமாகுமே தவிர அது நல்ல தீர்வாகாது. எனது கருத்து, இது மூட நம்பிக்கையே.

மன நிலை பேணுவோம். மகிழ்ச்சியாக இருப்போம்.
http://mananalathalam.blogspot.com
நன்றி:

No comments:

Post a Comment