Wednesday, August 24, 2011

அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்

இந்த ஆசனம் உட்கார்ந்த படி உடலை திருப்பும் ஆசனம்.Post image for அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்

செய்முறை
1. கால்களை முன்புறம் நீட்டியபடி தரையில் உட்காரவும்.
2. இடது காலை மடக்கி, பிட்டங்களின் கீழ் வைக்கவும். கால் தரையில் இருக்கட்டும். வலது கையை முதுகின் பின் வைத்துக் கொள்ளவும்.
3. வலது காலை மடித்து, தூக்கி, வலது பாதம் இடது தொடையை தாண்டி இடது தொடைகள் மத்திய பாகத்தை தொட்டுக் கொண்டு தரையில் பாதம் படியும் படி வைத்துக் கொள்ளவும்.
4. இடது கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்துக் கொள்ளவும்.
5. இடது கை நேராக வலது முழங்காலுக்கு வெளியே இருக்க வேண்டும்.
6. மூச்சை வெளியே விட்டுக் கொண்டு உடலை வலப்புறம் திருப்பவும். முடிந்த மட்டும் திருப்பவும்.
7. திருப்பிய நிலையில் 15 நொடிகள் இருக்கவும். நார்மலாக மூச்சு விடவும்.
8. பிறகு மூச்சை இழுத்து நார்மல் நிலைக்கு திரும்பவும்.
9. இதே போல கால்களை மாற்றி (இடது காலுக்கு பிறகு வலது காலை மடித்து) செய்யவும்.
பலன்கள்
1. உடலின் பிறப்புறுக்களுக்கு வலிமை ஊட்டுகிறது. பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இரு பாலருக்கும் பாலியல் செயல்பாட்டை செம்மைப்படுத்துகிறது.
2. முதுகெலும்புக்கு நல்ல பயிற்சியை அளிக்கிறது.
3. கணையம், அட்ரீனல் மற்றும் செக்ஸ் சுரப்பிகளை ஊக்குவிக்கிறது.
4. சிறுநீரகம், சிறுநீர்ப்பை இவற்றை பாதுகாக்கிறது.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஆசனம்.
எச்சரிக்கை
இந்த ஆசனம் செய்யும் போது முதுகு வலி, ஏற்பட்டால் ஆசனத்தை நிறுத்தி டாக்டரிம் / யோகா குருவிடம் தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment