Tuesday, August 16, 2011

மன நோய் எவ்வாறு ஆரம்பிக்கிறது?



36 வயதினையுடைய சுந்தரம், உயர்கல்விகள் பல பயின்று, தனியார் நிறுவனம் ஒன்றில் மிக உயர்ந்த வேலையில் உள்ளவர். தனியான மரியாதையான அலுவலகம், சொகுசு பங்களா, கார், வீடு, வேலை செய்வதற்கான பணியாட்கள், எந்த சிக்கலும் இல்லாத வாழ்க்கை, அமைதியான குடும்பம், நல்ல நண்பர்கள், வாழ்க்கையில் எந்த வித சோகத்தையும், வருத்ததையும் பார்த்திராதவர், மிகுந்த செல்வந்தர், அலுவகத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்கக் கூடியவர். ஒரு நாள் திடீரென்று அவர் காதில் மாயக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இது அவரது கவனத்தை சிதற வைத்தது. மிக எளிதான வேலைகளையும் தவறாக, குறைபாடுகளுடன் செய்ய ஆரம்பித்தார். அந்த குரல்கள் அவரின் எண்ணங்கள் மற்றும் செயல்களை விமர்சனம் செய்தது. இதனால், அவரது முகமும், உடலும் ஒருவித சோர்விலும், பதட்டத்திலும் வெளிற ஆரம்பித்தன.

அவர் காதில் குரல்கள் அதிகரிக்கவே வேலைக்கு செல்லாமலும் வெளியில் எங்கும் செல்ல விருப்பம் இல்லாமலும், வீட்டிலேயே முடங்கி கிடக்க ஆரம்பித்தார். அவர் ஆறு மாதத்தில் மிகவும் தளர்ந்து போய், அழுக்கான உடையை அணிந்து கொண்டு, முகச்சவரம் செய்யாமலும், எங்கோ ஓர் உலகத்தில் லயித்து, இயல்பு மீறி கிடந்தார். சிலர் மனநல மருத்துவரிடம் காண்பிக்க சொன்னனர். சுந்தரத்தின் பெற்றோர், குடும்பத்தின் பெருமை கூறி, எங்கள் குடும்பத்தில் மனநோய் வராது என்று கூறினர். சுந்தரத்தின் தங்கையின் நிச்சயதார்த்ததன்று, அவள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஊரார் சுந்தரத்தை கேலி செய்வர் என்று கருதி, அவரை வீட்டுக்குள் சிறை வைத்தனர். ஆனால் சுந்தரம் அதையும் மீறி, அங்கு வந்து, கூட்டத்தினரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் கேவலாமாக பேசியும், கைகளில் கிடைத்த பொருள்களை தூக்கி வீசியும், அங்குள்ள மனிதர்களை தாக்கவும் செய்தார். அவரது உறவினர்கள் அவரை கட்டிப் போட்டு, மனநல மருத்துவரிடம் சேர்த்தனர்.

சுந்தரத்திற்க்கு என்ன பிரச்சனை?
அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்?
இந்த பிரச்சினைகளில் இருந்து அவர் மீள் ஏதாவது வழிவகை உள்ளதா?
அவர் ஏன் மனநல மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டார்?

இதற்கான காரண்த்தைத் தெரிந்து கொள்ள மேலும் தொடர்ந்து இக்கட்டுரைகளைப் படியுங்கள்.

No comments:

Post a Comment