Wednesday, August 24, 2011

மத்ஸ்யாசனம்


மத்ஸ்யம்’ என்றால் மீன். மீன் தண்ணீரில் சுவாசிப்பதைப் போல், நமது சுவாசத்தை உயர்த்துவதால் இந்தப் பெயர் வந்தது.
Post image for மத்ஸ்யாசனம்
செய்முறை
1. இந்த ஆசனத்தை “பத்மாசனம்” போல் சப்பணமிட்டு உட்கார்ந்து செய்யலாம், இல்லை மல்லாந்து படுத்து கொண்டு செய்யலாம்.
2. முதுகு தரையில் படுமாறு மல்லாந்து படுக்கவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி தரையில் வைக்கவும். கால்கள் சேர்ந்திருக்க வேண்டும்.
3. வலது காலை மடக்கி இடது தொடையிலும், இடது காலை மடித்து வலது தொடையிலும் வைக்கவும். படுத்த நிலையில் பத்மாசனத்தில் இருப்பது போல் தோன்றும். பத்மாசனத்தில் ஆரம்பித்தால், மல்லாந்து பின் சாய்து படுத்தால் இந்த நிலை வரும்.
4. கைகளை மடித்து தலைக்கு இரு பக்கத்தில் தரையில் ஊன்றி வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து உடலின் நடுப்பகுதியை (மார்பு – வயிறு) மட்டும் மேலே எழுப்பவும்.
5. உடலின் நடுப்பகுதியை வில் போல் வளைத்தவுடன், கைகளை எடுத்து தொடைகள் மேல் மடக்கி வைத்திருக்கும் கால்களின் கட்டை விரல்களை பிடித்துக் கொள்ளவும். உச்சந்தலை, முழங்கைகள், கால்மூட்டுகள் ஆகியவை மட்டுமே தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
6. வளைந்த நிலையில், நார்மலாக சுவாசித்துக் கொண்டு 30 லிருந்து 50 நொடி இருக்கவும்.
7. மூச்சை வெளியே விட்டு நார்மல் நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
1. மார்பு, நுரையீரல்கள் விரிவடைவதால், சுவாசக்கோளாறுகள் குறைகின்றன.
2. மூலநோயில், ரத்தப்போக்கை நிறுத்த இந்த ஆசனம் உதவும்.
3. முதுகெலும்புக்கு பயிற்சி கிடைக்கிறது. பாலியல் செயல்பாடுகள் அபிவிருத்தி அடைகின்றன.
4. கழுத்து பலப்படுகிறது.
5. தைராய்டு, பார – தைராய்டு சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment