உலகெங்கும் பரவலாக பயில்விக்கப்படும் யோகக்கலை “ஆழ்நிலை தியானம்” எனும் Transcendental Meditatior (T.M.) இதன் செயல் முறையை எளிமையாக செய்யக்கூடிய மந்திர ஜபமாக மாற்றி உலகப்புகழ் பெறுமாறு வளர்த்தவர் மகரிஷி மகேஷ் யோகி (1917 – 2008)
அவரால் 1955 ல் ஆழ்நிலை தியானம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ல் மகரிஷி உலக சுற்றுப்பயணம் செய்து இந்த தியான முறையை பரப்பினார். 1959 ல் அவர் ‘அகில உலக தியானஸ்தாபனம்’ என்ற அமைப்பை துவங்கி, 1961 லிருந்து ஆழ்நிலை தியானத்தை பயில்விக்க, பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். வேகமாக பரவிய ஆழ்நிலை தியானம் குறிப்பாக அமெரிக்கர்களை மிகவும் கவர்ந்தது. 1998 ல் மகரிஷியின் ஸ்தாபனத்தால் 1000 பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. 40 லட்ச ஜனங்கள் இந்த தியான முறை கற்றனர். மகரிஷியின் ஸ்தாபனத்தின் சொத்துக்கள் / பண இருப்பு – 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு பில்லியன் என்றால் இலட்சம் கோடி!
ஆழ்நிலை தியானம் பிரசித்த பெற்ற யோக முறை மட்டுமல்ல. மிக அதிகமாக ஆராய்ச்சிகள் நடத்தப்பெற்ற தியான முறையாகும். பல ஆய்வுகள் இதனால் குறிப்பிடும்படியான பயன் ஏதுமில்லை, தவிர மற்ற தியான முறைகளை விட இது சிறந்ததல்ல என்கின்றன. ஏனைய ஆய்வுகள் ஆழ்நிலை தியான மந்திரங்களால் பலனுண்டு என்கின்றனர்.
பலன்கள்
மந்திர சர்ச்சைகள்
ஆழ்நிலை தியானத்தின் தனிச் சிறப்பே அதில் சொல்லித்தரப்படும் மந்திரங்கள் தான். இந்த மந்திரங்களின் மகிமை, உபயோகம் இவற்றை மகரிஷி மகஷ்யோகி பல வருடங்கள் தனது குருவான பிரும்மானந்த சரஸ்வதி அவர் பயின்றார். இந்த யோக மந்திர பண்டிதர்கள், ஆழ்நிலை தியான மந்திரங்கள் “தாந்திரீக சாஸ்திரத்திலிருந்து” எடுக்கப்பட்டவை என்கின்றனர். ஆழ்நிலை தியான மந்திரங்கள் மிகவும் ஜாக்கிரதையாக, பயிற்சி பெறுபவரின் மன, உடல் ஆரோக்கியம், வயது, பிரச்சனைகள் முதலியவற்றுக்கு ஏற்ற மாதிரி சொல்லித்தரப்படுகின்றன. மந்திரங்கள் இனிமையான த்வனி, நாதத்துடன் இருக்கும்.
செய்முறை
• ஆழ்நிலை தியான ம் ஏழு படிகள் கொண்ட பயிற்சி.
• முதல் இரண்டு படிகளில் ஆழ்நிலை தியானம் அறிமுகப்படுத்தப்படும்.
• மூன்றாவது நிலையில் பயிற்சி பெறுபவருடன் பிரத்யேக தனியான பேட்டி, முக்கிய அங்கமான “மந்திரம்” சொல்லித்தரப்படும்.
• பிறகு அடுத்தடுத்த நாட்களில் நான்கு (தினமும் 2 மணி நேரம்) தடவைகளில் தியான முறை விரிவாக கற்றுத்தரப்படும்.
• கற்றுத் தருவதற்கு முன் ஆசிரியரால் “பூஜை” செய்து இறை வணக்கம் செய்யப்படும்.
• 5, 6, 7 நாட்களில் பயிற்சி பெற்றவர், சரியாக தியானம் செய்கிறார் என்பது பரீட்சிக்கப்படும்.
கற்ற பின், தினமும் காலை, மாலை இரு வேளைகளில் 15 லிருந்து 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
ஆழ்நிலை தியானத்தை மகரிஷியின் அங்கீகரிக்கப்பட்ட ஆழ்நிலை தியான பயிற்சி மையங்களில் தான் கற்க இயலும்.
No comments:
Post a Comment