Wednesday, August 24, 2011

மன அழுத்தம் போக்கலாம் வாங்க

ஸ்டிரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளை சொல்லாதவர்கள், கேட்காதவர்கள் யார்? இவை நம் கூடப்பிறந்தவை. அகராதியின் படி ஸ்டிரெஸ் என்றால் (மன) அமுக்கம், அழுத்தம் என்று அர்த்தம். கவலை, காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவைகளெல்லாம் மன அழுத்தத்தை உண்டாக்கும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Post image for மன அழுத்தம் போக்கலாம் வாங்க
காரணங்கள்
இன்றைய உலகம் விரைவானது. போட்டிகளும், சவால்களும் நிறைந்தது. வாழ்க்கையில், சமூகத்தில், வெற்றி பெற, எப்படியாவது முன்னேற வேண்டும், அதன் வழிகள் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை என்பது இன்றய சமூக கொள்கை. ஓடும் உலகத்துடன் ஓட முடியாதவர்கள் மன அழுத்தம் அடைந்து, மனதளவில் நொண்டியாகின்றனர். மன பாதிப்புகள் உடலையும் கட்டாயம் பாதிக்கும்.
நெருங்கிய உறவினர்களின் மரணம், நோய், விவாகரத்து, போன்றவை மன அழுத்தத்தை உண்டாக்கும். சுனாமி, புயல், பூகம்பம், சாலை விபத்துகள், கற்பழிப்பு, வீட்டில் திருட்டு போன்ற பல நிகழ்வுகள், மன அழுத்தம் ஏற்பட காரணங்கள். தவிர அலுவலக பணியால் ஏற்படும் டென்ஷன், முக்கிய காரணம். மரணபயம், இதர அநாவசியமான பயங்களும் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
தவிர வீட்டு வேலைகளே மன அழுத்தத்தை அதிகரிக்கும். பெண் மணிகள் காலையில் எழுந்தவுடன் கணவருக்கு உணவு, பள்ளி செல்லும் குழந்தைகளின் உணவு, வீட்டிலிருக்கும் பெரியவர்களை கவனிப்பது, காய்கறிகாரர், பால்காரர் இவர்களை சமாளிப்பது இவை உண்டாக்கும் டென்ஷனால் மன அழுத்தம் உண்டாகும்.
இதர காரணங்கள்
நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை எட்ட முடியாமல் போதல்.
சுபாவமாகவே சிலர் எல்லா செயல்களையும் வேகமாக, பதட்டமாக செய்வார்கள். பொறுமை குறைவு.
குணக்கேடு எளிதில் கோபமடைதல், உணர்ச்சி பெருக்கு.
எதிர்மறை நிகழ்ச்சிகள்.
மன அழுத்தால் ஏற்படும் பாதிப்புகள்
மன அழுத்தம் பல நோய்களை உண்டாக்கும். உதாரணமாக சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் மன அழுத்தத்தால் உண்டாகும். இதை பலர் நம்புவதில்லை
மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் உடலின் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும்.
மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும்.
அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால், ரத்தக் கொதிப்பு அதிகமாகி, இதயம் பாதிக்கப்படும். வயிற்றில் புண் உண்டாகும்.
மன நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்
ஸ்ட்ரெஸின் பாதிப்புகள்
உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை குறிப்பிட்ட காலத்தில் செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதன் அடிப்படை காரணத்தை அறியாமல் நீங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் ‘மாடு’ மாதிரி உழைப்பதால் பயனில்லை. நீங்கள் தேவைக்கு அதிகமாக உழைப்பது, ஒவ்வொரு தடவையும் மேலதிகாரி கூப்பிடும் போது நகத்தை கடித்துக் கொண்டு நடுங்குவது இவை ஸ்ட்ரெஸ்ஸின் பாதிப்புகள்.
அடுத்த பாதிப்பு புகை பிடிப்பது. ‘டென்ஷன் தாங்க முடியவில்லை’ என்று சிகரெட்டை பற்ற வைப்பதால் உங்கள் ஸ்ட்ரெஸ் தீராது. மாறாக பல வியாதிகள் வந்து சேரும்.
இதே போல் குடிப்பது. மீளமுடியாத இந்த பழக்கத்துக்கு அடிமையாவது. கண்டபடி சாப்பிடுவது. அலுவலக ஸ்ட்ரெஸ்ஸை மனைவி மேல் காண்பிப்பது. எரிந்து விழுவது, கத்துவது.
அதீத கவலை.
ஸ்ட்ரெஸ்ஸால் மனச்சோர்வு, இதய நோய்கள், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், குடற்புண்/வயிற்றுப்புண், குழந்தையின்மை, மூட்டுவலி, பாலியல் கோளாறுகள் போன்ற பல நோய்கள் உண்டாகும். மேற்சொன்னவற்றுக்கெல்லாம் காரணம் ஸ்ட்ரெஸ்தான் என்று நீங்கள் உணர வேண்டும். அமைதியாக சிந்தித்து, உங்கள் குறை/நிறைகளை புரிந்துக் கொண்டு அடிப்படை காரணத்தை கண்டுபிடியுங்கள்.
உங்களுக்கு உதவ சில யோசனைகள்
நீங்கள் செய்யவேண்டிய காரியத்தை தள்ளிப்போடாதீர்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்ய வேண்டியதை செய்யுங்கள். வேலையை நீங்கள் விரும்பும் ஒரு விளையாட்டாகவோ, பொழுதுபோக்காக நினையுங்கள். பாஸ் கொடுத்த ‘தண்டவேலை’ என்று சிணுங்காதீர்கள்.
உங்களின் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு வராதீர்கள். ஓய்வு நேரத்தில் ஓய்வெடுங்கள். விடுமுறையை குடும்பத்தாரோடு செலவழியுங்கள். ஸ்ட்ரெஸ் தாக்கிய போது நீங்கள் நடந்து கொண்ட விதத்தை நினைத்து பார்க்க வேண்டும். அதை மனைவி, ஏனைய குடும்பத்தாருக்கு விளக்கிவிட்டு மேற்கொண்டு இனிமையாக நடந்துக் கொள்ளுங்கள்.
இந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு முதலில் உடல் திண்மை மற்றும் மனத்திண்மையும் வேண்டும். வைத்தியரிடம் சென்று உடலையும், மனதையும் வலுவாக்கும் வழிமுறைகளை, மருந்துகளை கடைப்பிடிக்கவும்.
அவசரமின்றி பேசுங்கள். அதிர்ந்து பேச வேண்டாம். எந்த விஷயமானாலும் நிதானமாக யோசியுங்கள்.
தோல்வியை எதிர்க்கொள்ள, தியானம் செய்யவும். மனம்விட்டு நண்பர்கள் அல்லது மனைவி இவர்களுடன் தோல்வியை பற்றி பேசுங்கள். மன ஆறுதல் கிடைக்கலாம்.
ஸ்ட்ரெஸ் நிலைகளில் சிகரெட்டை புடிக்காமல், ‘கூல்’ ஆன பழசரங்களை குடியுங்கள். அல்லது ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடியுங்கள். காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தால் தனியாக குடிக்காமல் சக-ஊழியர்களுடன் சேர்ந்து குடியுங்கள். பிரிஷ்டால் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் சொல்வது தான் இந்த குறிப்பு.
சங்கீதம் மன அமைதியை உண்டாக்கும். பிடித்த ராகத்தை கேட்டு அனுபவியுங்கள்.
தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சின்ன விஷயமாக தோன்றினாலும், மனமகிழ்ச்சியை தரும்.
டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தால், பலவித பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, இவற்றை காலை நேரத்தில் செய்துக் கொள்ளுங்கள்.
தியானம் நிரூபிக்கப்பட்ட ஸ்ட்ரெஸ் நிவாரணி. விடாமுயற்சியாக சரிவர நிபுணரிடம் கற்று, தியானத்தில் ஈடுபடவும். அலுவலகத்தில் ஸ்ட்ரெஸ் தாக்கும். போது 5-10 நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள். யோகாவும், பிராணாயாமமும் அவசியம் தேவை. முறைப்படிக் கற்றுக் கொண்டு செய்யுங்கள்.
ஜப்பானிய தொழிற்சாலைகளில் குத்துச் சண்டை வீரர்கள் உபயோகிக்கும் குத்து பழகும் பெரிய ‘பைகள்’ தனியிடங்களில் தொங்க விடப்பட்டிருக்கும். ஸ்ட்ரெஸ் தாக்கும் போது, தொழிலாளிகள் இந்த அறைக்கு வந்து பைகளை குத்துகள் விட்டு தங்கள் டென்ஷனை குறைத்துக் கொள்வார்கள். அதே போல் நீங்களும் குத்துபை இல்லாவிடில், ஒரு டென்னிஸ் பந்தை கையில் வைத்து நசுக்கி, உங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ளலாம்.
உடலுறவு (மனைவியுடன்) ஸ்ட்ரெஸை குறைக்கும். உடலுறவு நடந்தவுடன், வெளியாகும் பீட்டா என்டோர்பின்ஸ் உங்களை அமைதிப்படுத்தும். மனைவியை அடிக்கடி அணைத்து மகிழுங்கள். இது உங்களை திசை திருப்பி, உங்களின் மனக் கவலைகளை மறக்க உதவும்.
உங்கள் அலுவலக வேலையில் தவறு நேர்ந்தால், உதாரணமாக உங்கள் கம்பெனியில் உங்களால் ஒரு ‘கஸ்டமரை’ இழக்க நேர்ந்தால் அதன் அடிப்படை காரணங்களை எழுதிப்பாருங்கள். உங்கள் பாஸ்ஸை அணுகு முன்பு ஒரு 15 நிமிடங்கள் காரண காரியங்களை ஆலோசித்து பிறகு உங்கள் ‘ பாஸ் ‘ ஐ சந்தித்து பேசுங்கள்.
மன ஸ்ட்ரெஸ்ஸை, உடல் ஸ்ட்ரெஸ்ஸால் விரட்டுங்கள். வீட்டில் பரணை சுத்தப்படுத்துவது போல் உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். வீட்டு வேலைகள்-துணி துவைப்பது, இஸ்திரி போடுவது, பெருக்குவது போன்ற உடல் உழைப்பில் ஈடுபடுங்கள்.
திட்டமிட்டு வேலைகளை செய்யுங்கள். திட்டமிடும்போது தோல்விகள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்து திட்டத்தை தீட்டுங்கள்.
ஸ்ட்ரெஸ் தூக்கம் கெடுகிறதா? படுக்கையில் படுத்து, “நான் அரைமணி தூங்கப்போவதில்லை” என்று உறுதியாக தூங்காமலிருக்க முயற்சி செய்யுங்கள். தன்னால் தூக்கம் வரும்.
சிகரெட் பழக்கத்திற்கு அடிமை ஆகாதீர்கள். பபில்கம்மை ஐ உபயோகப்படுத்துங்கள்.
பணக்குறைவு மிக முக்கியமான, ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்குவதில், ஒரு காரணம். இதை நீங்கள் பலவழிகளை யோசித்து எதிர்க் கொள்ளவேண்டும்.
நீச்சல் அடிப்பது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் ஒரு பயிற்சி.
ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணவும்.
ஆபிஸ§க்கு போக, வர மேற்கொள்ளும் பயணத்தை (பஸ்/டிரெயின்) முடிந்த வரை சௌகரியமாக்கிக் கொள்ளுங்கள்.
சிரிப்பு ஸ்ட்ரெஸை போக்கும். சிரித்து வாழுங்கள்
ஆயுர்வேத முறைகள்
சிகிச்சை முறைகள் வாசனை, மூலிகை தைலங்களால் ‘மசாஜ்’ செய்வதுடன் ஆரம்பிக்கும். லாவண்டர், துளசி, புதினா, ஜெரானியம் எலுமிச்சை போன்ற பல பொருட்கள் உள்ள தைலங்கள் உபயோகிக்கப்படும். ஷீராபால தைலம், தன்வந்திரி தைலங்களும் பயன்படுத்தப்படும். தவிர தேங்காய் எண்ணை, சந்தன தைலம் இவற்றை உபயோகிக்கலாம்.
இதர மூலிகைகள் / பொருட்கள்
வாதுமை இது சிறந்த நரம்பு டானிக்.
அக்கரகாரம் நரம்புத் தளர்ச்சிக்கேற்ற மருந்து.
ஞாபகசக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.
பூனைக்காலி ஆண்மையை பெருக்கும் நரம்பு டானிக்
சீமை சதவாரி ஆண்மை பெருக்கி, ஆன்டி – ஆக்ஸிடன்ட்.
சீரகம் உடலுக்கு வலிவு தரும் உணவு செரிக்க உதவும்.
அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா – மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து. நரம்புகளை பலப்படுத்தும். மூட்டு, திசுக்கள், இவற்றை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நல்ல உறக்கத்தை உண்டாக்கும்.
சோயிக்கீரை வயிறு, நரம்புகளுக்கு நல்லது
இஞ்சி பல மருந்துகள், டானிக், இவற்றுடன் சேர்க்கப்படுகிறது. வயிற்றுக்கு நல்லது.
ஜாதிக்காய் ஆண்மை பெருக்கி, டானிக், டென்ஷனை குறைக்கும். மனதை அமைதிப்படுத்தும்.
ஏலக்காய் டானிக், ஆண்மை பெருக்கி, ஞாபக சக்தி மேம்படும்
அதிமதுரம் டானிக், உடலை வலுவாக்கும்.
கோஷ்டம் டானிக் மருந்துகள் தவிர, உடற்பயிற்சி, யோகா, தியானம் இவை பலன் தரும்.
மன அழுத்தத்தின் காரணம் மனதை அதிகம் அலட்டிக்
கொள்வது என்கிறது ஆயுர்வேதம்.
பழச்சாறுகள், குல்கந்த் செரித்த பால், லஸ்ஸி, உட்கொள்ளவும். உணவில் ஏலக்காய், கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கொள்ளவும். பாதம் பருப்பு தேங்காய் இவைகள் மன அழுத்தத்தை குறைக்கும்.
உணவும் ஸ்ட்ரெஸ்ஸீம்
உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது (உதாரணமாக பாஸ் உடன் டிஸ்கஸன் அல்லது மீட்டிங்) அதற்கு 2 மணி முன்பாக அதிக கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்ளவும். தானியங்கள் பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். செரோடோனின் என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும். இந்த ஹார்மோன் குறைந்தால் ஸ்ட்ரெஸ் சுலபமாகத் தாக்கும்.
பச்சை காய்கறிகள், கீரைகள், ‘பி’ விட்டமின் செறிந்தவை. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், செரோடோனின், டோஃபாமைன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
அலாபாமா பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி விட்டமின் ‘சி’ ஸ்ட்ரெஸ் உண்டாக காரணமாக ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆரஞ்சு ஜுஸ் விட்டமின் ‘சி’ செறிந்தது. ஆனால் அதைவிட சிறந்தது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய், ஒரு ஆரஞ்சை விட இருமடங்கு விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. நெல்லி ஜீஸ் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
முளை கட்டிய உளுந்தும் ஸ்ட்ரெஸ் -ஐ போக்க வல்லது.
வேர்க்கடலை அடங்கிய சாக்லேட் மனதை அமைதிப்படுத்த உதவும் என்டோர்பின்ஸ் ஐ ஊக்குவிக்கும்.
மீன் ஸ்ட்ரெஸ்ஸால் உண்டாகும் அக்ரிசன் ஐ குறைக்கும்.
எந்த வகையானாலும் சரி, பழங்கள் நல்லவை.
ஓட்ஸ் கஞ்சி ஸ்ட்ரெஸ் ஐ குறைக்க உதவும். இந்த கஞ்சியுடன் வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால், தூங்க உதவும். மெலாடோனின் ஹார்மோன் உண்டாக்கும்.
குழந்தைகளுக்கும் மன அழுத்தமா?
இந்த கேள்விக்கு பதில் “ஆம்” என்பது தான். மனதத்துவ டாக்டர்கள் தங்களிடம் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 5 வருடங்களில் இரட்டிப்பாகி விட்டது என்கிறார்கள். அதுவும் 3 வயது குழந்தைகளும் வருகிறார்கள் என்கிறார்கள்.
காரணமின்றி அழுவது, சாப்பிட மறுப்பது, தூக்கமின்மை, அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது, அடிக்கடி மனோநிலை மாறுவது இவை சிறுவயது குழந்தைகளிடம் காணப்பட்டால் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பள்ளிக்கு போகாமல் தவிர்க்க பல குழந்தைகள் ‘வயிற்றுவலி’ என்று சொல்லி தப்பிப்பது சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் கூட ‘டென்சன்’, “ஸ்ட்ரெஸ்” இவற்றுக்கு ஆளாவது ஏன்?
பெற்றோர்கள் தாங்கள் அடைய முடியாத லட்சியங்களை குழந்தைகள் மேல் திணிப்பது. இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் பெற்றோர்களிடையே மிக அதிகமாகிவிட்டது.
எதற்கெடுத்தாலும் குழந்தைகளை சில ‘ஸ்பெஷல்’ படிப்புகளுக்கு சேர்த்து விடுவது உதாரணமாக கோடை விடுமுறையில், பெயிண்டிங், ஆங்கிலம் பேசுவது போன்றவற்றில் சேர்ப்பது. இவை நல்லதாக இருக்கலாம். ஆனால் குழந்தை விருப்பம், ஏற்றுக்கொள்ளும் சக்தியை பொருத்தது.
பள்ளிக்கு போகவேண்டிய வயது 41/2 மேலாக இருக்க வேண்டும். ஆனால் 3 வயது குழந்தைகளையே ஃப்ரீ.கே.ஜில் சேர்த்து விடுகிறார்கள். ‘குருவி தலையில் பனங்காயை’ வைத்தாற் போல் 3 வயதிலேயே குழந்தைகள் சமாளிக்க முடியாமல் துவண்டு விடுகின்றன.
எனவே பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியவை
சமச்சீர் உணவு, அதாவது பலவகை சத்துக்கள் சரியான விகிதத்தில் சேர்ப்பது போல், குழந்தைகளுக்கும் சமச்சீர் சூழ்நிலையை பெற்றோர்கள் உருவாக்கி தர வேண்டும். இத்தனை நேரம் விளையாட்டு, படிப்பு எவ்வளவு நேரம் டி.வி. எவ்வளவு நேரம் பார்க்கலாம், தூங்கும் நேரம் இவற்றையெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாக எடுத்துச்சொல்லி, பொறுமையாக பழகவேண்டும்
படிப்பை திணிக்காதீர்கள். விளையாட்டையும் தடுக்காதீர்கள்.
ப்ரதியேக பள்ளிகள் ஆங்கிலம் கற்பிப்பது, பெயின்டர் – போன்றவற்றில் சேர்ப்பதை குழந்தையின் விருப்பத்தை பொறுத்து செய்யுங்கள். நீச்சல், சைக்கிள் ஓட்டுவது இவை நல்ல உடற்பயிற்சிகள் தான். இவற்றையும் பலவந்தப்படுத்தாதீர்கள்.
குழந்தைகளை ‘பொருட்காட்சி’ பொருளாக ஆக்காதீர்கள். விருந்தினர் முன் ‘இவள் நன்றாக பாடுவாள் – எங்கே பாடு’ என்று துன்புறுத்தாதீர்கள்.
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு சீராக இருக்க வேண்டும். இந்த அன்பான உறவு ஏற்படுவது கடினம். அதனால் அன்புடனும், நட்புடனும் குழந்தைகளை நடத்துங்கள். டென்ஷன் என்பது என்னவன்றே தெரியாமல் குழந்தைகளை வளர்க்க விரும்பினால், முதலில் பெற்றோர்கள் டென்ஷன் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
மனோரீதியாக சிக்கல்கள் குழந்தைகளை தாக்காமல் இருக்க குழந்தைகளை சுதந்திரமாக (தேவையான அளவுக்கு) உங்கள் மேல் எல்லாவற்றுக்கும் சார்ந்திராமல் வளருங்கள். வாழ்க்கையின் சுக, துக்கங்களை குழந்தைகள் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் உங்களிடம் பேசும்போது கவனமாக, காது கொடுத்து கேளுங்கள்.
தொன்று தொட்டு பெற்றோர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை – குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழியுங்கள் என்பது. இது எந்த காலத்துக்கும், எல்லாவித பெற்றோர்களுக்கும் பொருந்தும். குழந்தைகளுடன் குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது செலவிடுங்கள்.
குழந்தைகள் விரும்பும் பொழுது போக்கு கலைகளில், நடனம், பாட்டு போன்றவற்றில், ஈடுபடுத்துங்கள். இது மன உளைச்சலை குறைக்கும்.
டி.வி. பார்ப்பது பெரிய பிரச்சனை. குறைந்த நேரமே டி.வி. பார்க்க அனுமதிக்கவும். இதை கண்டித்தும், தண்டித்தும் செய்யாமல் அன்பாக சொல்லுங்கள்.
குழந்தைகளின் உணவில் புரதம், காய்கறிகள் அதிகம் சேர்க்கவும்.
குழந்தைகள் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவதை தவிர்க்கவும்.
ஒரு நாளில் ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுவது, மனோரீதியாக, குடும்ப உறவை பலப்படுத்தும்.
ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011

நினைவில் வைக்க மெமோனிக்ஸ்

கி.மு. 6 ம் நூற்றாண்டில் சிமோனிடெஸ் என்ற கிரேக்க புலவர் முதன் முதலாக மெமோனிக்ஸ் என்ற முறையை, விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளப் பயன்படுத்தினார் எனப்படுகிறது. இதன் அடிப்படை முறை என்னவென்றால் முதலில் நீங்கள் ஒரு சூத்திரம் போல சில மாதிரிகளை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் இந்த அடிப்படை சூத்திரத்தை ஆதாரமாக கொண்டு, தினசரி விஷயங்களை ஞாபகத்தில் கொண்டு வரலாம். இதை சற்று விவரமாக பார்ப்போம்.
Post image for நினைவில் வைக்க மெமோனிக்ஸ்
நாம் ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்யும் போது அதை ஒரு வரிசைக்கிரமாக செய்யும் போது, சுலபமாக மனதில் பதிகிறது. உதாரணமாக பெருக்கல் வாய்ப்பாடு. எட்டாம் வாய்ப்பாடை எடுத்துக் கொள்ளுங்கள். 8 ஙீ 1 = 8, 8 ஙீ 2 = 16, 8 ஙீ 3 = 24 என்ற பின்பு 8 ஙீ 4 = என்று வரிசையாக வந்தால் தான் வாய்ப்பாடு, தவறின்றி வரும். 8 ஙீ 3 க்கு பிறகு 8 ஙீ 5 என்று தாவுவது கடினம். இதே போல் விஷயங்கள், விவரங்கள், பெயர்கள் இவற்றையும் ஒரு வரிசைக்கிரமாக அல்லது ஒரு டிசைனில் கொண்டு வந்தால் நினைவில் வைத்துக் கொள்வது சுலபம். இதற்கு மெமோனிக்ஸ் உதவுகிறது.
உங்கள் வீட்டை நன்றாக சுற்றி வலம் வாருங்கள். அதில் 10 இடங்களை வாசல் படிக்கட்டு, வாசல், ஹால், பூஜை அறை, படுக்கை அறை முதலியன – நன்றாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். சரி, இப்போது உங்கள் மனைவி ஆபிஸிலிருந்து வருகையில் காய்கறிகளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளவும். நீங்கள் உங்கள் வீட்டின் இடங்களுடன் இந்த சாமான்களை இணைத்துக் கொள்ளுங்கள். வாசல் படிக்கட்டுகளில் கேரட், பட்டாணி வாசலில், வாழைப்பழம் ஹாலில், பூக்கள் பூஜை அறையில், தக்காளி படுக்கை அறையில் – இவ்வாறு கிரமாக நினைத்துக் கொள்ளுங்கள். கடைக்கு சென்றவுடன் வீட்டின் இடங்களை ஞாபகத்திற்கு கொண்டு வந்தால், வாங்க வேண்டிய காய்கறிகளும் நினைவிற்கு வரும்.
அக்ரோனிம்
ஒரு சொற்றொடரின் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்படும் சொல் அக்ரோனிம் எனப்படுகிறது. உதாரணமாக ராடர். அக்ரோனிம் இது போன்ற முறையான வார்த்தையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வானவில்லின் வண்ணங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள நம்மில் பலர் ‘விக்பியர்’ என்ற அர்த்தமில்லா வார்த்தையை ஞாபகம் வைத்துக் கொள்கிறோம். இந்த முறையை நீங்கள் பல விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள பயன்படுத்தலாம்.
பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்தல்
முதியவர்களுக்கு தர்மசங்கடமான நிலைமை, தாங்கள் சந்திக்கும் நபர்களின் பெயர்களை மறப்பது. இதை சரி செய்ய சந்திக்கும் நபர் தனது பெயரைச் சொல்லும் போது கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு தடவைக்கு இரு தடவையாக பெயரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
மனதில் பெயரை எழுதிக் கொள்வது போல் நினைத்துக் கொள்ளுங்கள்.
பெயருடன் வேறு படம் (அ) பொருட்களை இணைத்துப் பாருங்கள்.
முடிவாக, முதியவர்கள் தங்களின் புலன்கள் அனைத்தையும் சுறுசுறுப்பாக பயன்படுத்த வேண்டும். ஞாபக சக்தி குறைவைப் ற்றி கவலைப்படாமல் அதை மேம்படுத்தும் உந்துதலை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். முன் பின் தெரியாத இடங்களுக்கு சென்றால், சுற்றும் முற்றும் உள்ள முக்கிய இடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறிய குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. தவிர தனிமையை தவிர்க்கவும். உற்றோர் நண்பர்களுடன் இனிமையாக பழகி எப்போதும் கலகலப்பாக இருந்தால் மனநலம் ஆரோக்கியமாக இருக்கும்.
உடற்பயிற்சி – உடற்பயிற்சியால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் மூளை வலுவடைந்து ஞாபக சக்தி பெருகும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவும். உடற்பயிற்சியாலும், அளவான உணவாலும் உடல் எடையை சரியான அளவில் வைப்பது மறதியை போக்க உதவும். அதிக உடல் எடையால் பல வழிகளில் ஞாபக சக்தி பாதிக்கப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால், மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுகிறது. மூளையின் திறன் குறையும். பருமனானவர்களின் உடலில் உள்ள கார்டிசால் ஹார்மோன் மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும்.
தியானம் – தியானம் ஞாபக சக்தியை பெருக்கும். ஏனென்றால் மனதை தியானம் ஒரு முனைப்படுத்துகிறது. மூளையின் திசுக்கள் உந்தப்படுகின்றன. மறதி மறைகிறது. முறையாக கற்றுக் கொண்டு, கட்டாயம் தியானத்தில் ஈடுபடவும்.
பொழுதுபோக்கு – சங்கீதம் கேட்பது, ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு செல்வது, புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் வெளியில் செல்வது, உரையாடுவது, தோட்டக்கலை, கை வேலை, படங்கள் வரைவது என்று பல விஷயங்களை மேற்கொள்வதால் மூளைக்கு அமைதியும், சுறுசுறுப்பும் கிடைக்கும்.
சத்துணவு – முன்பே சொன்னபடி சமச்சீர் உணவு (சிறிது புரதம் கூடுதலாக) மறதியை வெல்ல உதவும்.
ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011

பிராணாயாமம் – மூச்சைகட்டுப்படுத்தும் கலை

நம்மால் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் சில நிமிடங்களுக்கு கூட மூச்சு விடாமல் இருக்க முடியாது. எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்கின்றன. காற்றை உள்ளிழுத்து அதன் ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.
கி.மு. 5000 வது ஆண்டில் பதஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட அஷ்டாங்க (எட்டு வகை) யோகாவின் நாலாவது படி, பிராணாயாமம். இருதய நோய்க்கு உகந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதை முறைப்படி நல்ல ஆசானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ‘பிராணா’ என்றால் உயிர் மூச்சு. ‘யாமா’ என்றால் ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்பாடு. உடலின் எல்லா வித அவயங்களும் சரியாக இயங்க தேவைப்படும் பிராண வாயுவை தருவது மூச்சு.
‘பிராணா (அ) பிராணன்’ என்ற வார்த்தை பல பொருள் கொண்டது பிராணன் என்றால் உயிர் – உயிர்சத்தி, காற்று, வாயு, பிரபஞ்ச சத்தி, சுவாசம், மூச்சு என்று பல பொருள் கூறலாம்.
நாசி வழியே உள்ளிழுக்கப்படும் காற்று, நுரையீரலை சென்று அடைகிறது. மார்பு விரிவடைந்து, ரத்தக்குழாய்கள் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. நுரையீரலில் “அல்வியோலி” (கிறீஸ்மீஷீறீவீ) என்ற சிறிய, மெல்லிய கொத்துகளாக ஆயிரக்கணக்கான காற்றுப்பைகள் உள்ளன. ரத்தக்குழாய்களுக்கும், அல்வியோலிக்கும் நடுவே உள்ள ‘தடை சுவர்’ ஒரு மைக்ரான் தடிமன் தான்! ஒரு மைக்ரான் ஒரு சென்டி மீட்டரின் 10,000 த்தில் ஒரு பகுதி (1/10,000)! நாம் சுவாசித்த காற்றின் பிராண வாயுவை (ளிஜ்ஹ்ரீமீஸீ) ரத்த தந்துகிகளின் (மெல்லிய ரத்தக் குழாய்கள்) சிவப்பு அணுக்கள் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இரத்தத்தில் உள்ள கரியமில வாயு (சிணீக்ஷீதீஷீஸீ – பீவீ – ஷீஜ்வீபீமீ) காற்றுப்பைகளுக்கு சென்று, நாம் மூச்சு விடும் போது, மூக்கு வழியே வெளியேறுகிறது நுரையீரலில் ரத்த தந்துகிகளுக்கும், காற்றுப் பைகளுக்கும் காற்றுப் பரிமாணம் இவ்வாறு நடக்கிறது.
பிராண வாயு இன்றி நாம் உயிர் வாழ முடியாது. இந்த பிராண வாயுவை நாம் சுவாசத்தின் மூலமாக பெறுகிறோம். பிராண சக்தியின் உடலின் இயக்கம், அறிவு, ஆன்மீக வளர்ச்சிகளை ஊக்குவிக்கிறது. பிராணன் இல்லாவிடில் உலகில் ஒன்றுமே வாழ முடியாது. பிராணன் தான் ஜீவாத்மாவையும், பிரகிருதியையும் இணைக்கிறது. பிராணனே பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி.
மனித சரீரத்தில் பிராணன் சுவாசத்தை குறிக்கிறது. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியை கட்டுப்படுத்தியது போல் தான். மூச்சை கட்டுப்படுத்தினால் முனிவராகலாம்!
பிராணாயாமத்தை அறிந்து கொள்ளும் முன்பு, நாம் சொல் வழக்கில் “பஞ்சப் பிராணன்” என்று கூறும் ஐந்து வகை பிராணனைப் பார்ப்போம்.
1. பிராண வாயு
இருக்குமிடம் – தலை
பணி – மூச்சு உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இரத்த ஒட்டத்தையும், சுவாசத்தையும் நடத்துகிறது. கேட்பது, சுவைப்பது, சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், ரத்த ஒட்டம் இவற்றையெல்லாம் இயக்குவது.
2. உதான வாயு
இருக்குமிடம் – கழுத்து, தொண்டை
பணி – தலையை நேராக வைப்பது, தும்முவது, ஏப்பம் விடுவது மற்றும் வாந்தி – இந்த இயக்கங்களை நடத்துகிறது.
3. வியான வாயு
இருக்குமிடம் – மார்பு
பணி – உடலிலுள்ள நாடிகளின் (நாளங்கள்) மூலம் சக்தி உடலெங்கும் பரவ உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது, நரம்புகளை கட்டுப்படுத்துவது, ரத்த சுழற்ச்சியை சீர் செய்வது, ஆக்சிஜனை கொண்டு செல்வது – இந்த பணிகளை நடத்துகிறது.
4. சமான வாயு
இருக்குமிடம் – தொப்புள்
பணி – வயிற்றில் பசி எடுக்கவும், சூடு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. பசி, தாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
5. அபான வாயு
இருக்குமிடம் – அடிவயிறு
பணி – குடல் பகுதிகளுக்கு கீழே இருக்கும் உறுப்புக்களின் இயக்கத்தை நடத்துகிறது. உடலின் கழிவுகளை கீழ்ப்புறமாக வெளியேத் தள்ளும்.
நாடிகள்
பிராண சக்தி எவ்வாறு நம் உடலில் பரவுகிறது?
நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000) உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை 10 நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை
1. இடை நாடிகள் – முதுகுத் தண்டின் இடது பாகத்தில் உள்ளது. இந்த இடை நாடி சந்திர நாடி என்று சொல்லப்படுகின்றது. நம் உடலுக்கு ஒய்வை தரும். ‘பாராசிம்பதெடிக் நர்வுஸ்’ (றிணீக்ஷீணீsஹ்னீஜீலீணீtலீமீtவீநீ ழிமீக்ஷீஸ்மீs) களை இயக்குவது சந்திர நாடி தான்.
2. பிங்கலை நாடி – இது முகுதுத் தண்டின் வலது பக்கத்தில் அமைந்திருக்கின்றது. இதை சூரிய நாடி என்பார்கள். நம் உடலை  சுறுசுறுப்பாக வைக்க காரணமான ‘சிம்பதெடிக் நர்வுஸ்’ தூண்டப்படுவது சூரிய நாடியால் தான்.
3. சூட்சும நாடி – முதுகுத் தண்டின் மத்தியில் அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு தெரியாத நாடி. பிராணாயாமத்தின் போது மூச்சை இழுப்பதும், விடுவதும் இடை பிங்கலை நாடிகளால் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவிலே, சூட்சும நாடி இயங்குகின்றது. அதாவது மூச்சை உள்ளிருத்தும் போது  சூட்சும நாடி இயங்க தொடங்குகின்றது. இந்த சக்தியை சில யோகிகள் குண்டலினி சக்தி என்கின்றனர்.
பந்தங்கள்
பந்தங்கள் என்றால் முடிச்சுகள் – ஒன்றையன்று சேர்ப்பவை. பந்தங்கள் பிராணயாமத்தின் முழுப் பலனை பெற உதவுகின்றன. பந்தங்கள் மூன்று வகைப்படும். இவை பிராணாயாம பயிற்சிகள்.
1. உத்தியான பந்தம் – உத்தியான என்றால் பறப்பது என்று பொருள். இந்த பந்தம் டையாஃபர்ம் (ஞிவீணீஜீலீக்ஷீணீரீணீனீ) இயக்கத்திற்கு உதவுகிறது.
2. ஜாலாந்தர பந்தம் – ஜாலா என்றால் வலை. சிலந்தி வலை என்று சொல்லலாம். இது பிராணாயாமத்துக்கு செய்யப்படும் பந்தம். இதில் முகத்தாடை, மார்பில் அமிழ்ந்து இருக்க வேண்டும்.
3. மூல பந்தம் – மூலம் என்றால் ஆரம்பம் அல்லது அடிவேர் என்று பொருள். இது ஆசன வாயுக்கும், விதைப்பைக்கும் நடுவில் இருக்கிறது. ஆசன வாயை சுருக்கி விரித்து செய்வது மூல பந்த பயிற்சியாகும்.
சக்கரங்கள்
இடை, பிங்கலை, சூஷ்ம மூன்று நாடிகளும் சேரும் சந்திப்புகள் சக்கரங்கள் எனப்படுகின்றன. பிரசித்தி பெற்ற யோகிகளும், ரிஷிகளும், சக்கரங்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் தவம் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. உடலில் ஏழு முக்கியமான சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் இருப்பது.
2. சுவாதிஸ்தைய – இந்த சக்தி தொப்புளுக்கும், ஜனன உறுப்புகளுக்கும் நடுவில் உள்ளது.
3. மணி பூரகம் – தொப்புளில் இருப்பது.
4. ஆனந்த சக்கரம் – இதய பிரதேசத்தில் இருப்பது.
5. விசுதா – தொண்டையின் இருப்பிடம்.
6. அஸ்னா – இரு கண்ணிமைகளுக்கு நடுவில் இருப்பது.
7. சகஸ்ரார – சிரசில் அதாவது மூளையில் அமைந்துள்ளது.
பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்
• பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம் உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.
• தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம் நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.
• சுவாச இயக்கம் மேம்படும். மற்றும் சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.
• ஜீரண சக்தி மேம்படும். ஜீரண மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.
• உடலின் ரத்த சுழற்சி சீராகும் இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம் சீராகும்.
• உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
• மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும். ஆயுள் பெருகும்.
• ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பிராணாயாமம் செய்வதற்கு முன்பு
• நீங்கள் முதன் முறையாக பிராணயாமம் செய்வதாக இருந்தால் உங்கள் உணவில் கட்டுப்பாடு வேண்டும். எளிமையான, சுலபமாக ஜீரணிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் காபி, டீ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது அனுபவம் ஆன பின் நீங்கள் எதைவேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை உணவு சாத்திவீகமாக இருக்க வேண்டும். பசும்பால், பசுந்நெய், கோதுமை, சாறு செறிந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் இவற்றை அதிகமாக உண்ணலாம். சூடான மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
• பிராணாயாமத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு வரவேண்டும். விட்டு விட்டு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் நேரத்தை குறைத்து போகப் போக நேரத்தை அதிகரிக்கவும்.
• பிராணாயாமம் செய்யும் முன் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
• செய்யும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
• காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யும் முன் டாக்டரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
• காலை நேரம் பிராணாயாமம் செய்ய ஏற்றது. இது முடியாவிட்டால் சாயங்காலம் செய்யலாம்.
• பிராணாயாமத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பே பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
• குருவிடம் கற்றுக் கொள்ளாமல் பிராணாயாமத்தை செய்யக் கூடாது.
• பிராணாயாமம் செய்யும் முன் நாடிசுத்தி செய்ய வேண்டும் இதற்கு குரு தேவை.
பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
1. மூச்சை உள்ளே இழுப்பது (பூரகம்)
2. மூச்சை அடக்குதல் (கும்பகம்)
3. மூச்சை வெளிவிடுதல் (ரேசகம்)
பூரகம், ரேசகம் நடுவில் மூச்சை அடக்கி ஒரு நிலையில் வைப்பது
முக்கியமானது. மூச்சை உள்ளே இழுக்காமலும், வெளியே விடாமலும் ஒரு நிலையில் நிற்பது சுவாசத் தேவையை குறைக்கின்றது. வளர்சிதை மாற்றம் சீராகிறது. ஒரு வகையில் மூச்சை அடக்கிக் கொள்வது உடலுக்கு ஒய்வை தருகின்றது.
மேற்சொன்ன மூன்று பயிற்சிகளும், ஒவ்வொன்றும் ஒரே அளவு நேரத்தில் செய்ய வேண்டும். மூன்று நிலைகளும் சமமாக இருக்க வேண்டும். யோகா சொல்வது என்னவென்றால் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுப்பது சூட்டை உண்டாக்கும். அதே போல இடது நாசியால் மூச்சை இழுப்பது குளிர்வை உண்டாக்கும்.
பலருக்கு ஏற்படும் சந்தேகம் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அடக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் வெளிவிட வேண்டும். இதை தெரிந்து கொள்ள குருவை நாட வேண்டும். தவறுதலாக செய்தால் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; வேறு கோளாறுகளும் உண்டாகலாம்.
நாடிசுத்தி
கும்பக பயிற்சியில்லாமல் பூரகவும், ரேசகமும் செய்வது நாடிசுத்தி எனப்படும்.
• வஜ்ராசனம் அல்லது பத்மாசன நிலையில் உட்காரவும்.
• வலது கையின் நடு மற்றும் சுண்டு விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். இதர விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இதை நாசிக முத்திரை என்பார்கள்.
• இடது கையின் கட்டை விரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதை சின் முத்திரை என்பார்கள்.
• வலது கையின் கட்டை விரலால் உங்கள் வலது நாசியை மூடிக் கொள்ள வேண்டும். இடது நாசியின் மூலம் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
• உடனடியாக வலது மூக்கை திறந்து விட்டு இடது நாசியை மோதிர விரல்களால் மூடிக் கொள்ளவும். வலது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும்.
• இப்பொழுது வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து, இதை மூடி இடது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும். இதை மாற்றி மாற்றி 27 முறை செய்யவும்.
பிரணாயாமா முறைகளிலேயே பல வகைகள் உள்ளன. நாடிசுத்தி,
கபாலபாதி, சூரிய பேதனா, சந்திர பேதனா, விலோமம், சீதளி, பிரதிலோமம் இத்யாதி வகைகளுள்ளன. தகுந்த குருவிடம் இவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் அதன் செயல் முறைகளை குருவிடம் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். பிராணாயாமத்தின் பல வகைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம். தொடரும்.
1. அனுலோமா – விலோமா பிராணாயாமா
செய்முறை
உட்காரும் யோகாசன நிலைகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரவும். உடலை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும். கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளவும்.
1. இரண்டு நாசி துவாரங்களால் மூச்சை நிதானமாக, முழுமையாக வெளியிடவும்.
2. பிறகு உடனடியாக அடிவயிற்றுத் தசைகளை இயக்கி மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை உள்ளிழுக்கும் பொழுது எந்த சப்தமும் எழாமல் பார்த்துக் கொள்ளவும்.
3. பிறகு மூச்சை உடனே வெளியே விடவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
2. உஜ்ஜை பிராணாயாமா
1. பத்மாசனம் (அ) வஜ்ராசனம் போன்ற உட்காரும் நிலை யோகாசனங்களில் உட்கார்ந்து கொள்ளவும்.
2. நுரையீரலிலுள்ள காற்றை இரண்டு நாசிகளின் வழியே வெளியே விட்டு பிறகு உள்ளிழுத்துக் கொள்ளவும். உள்ளிழுத்து கொள்ளும் நேரம் மூன்றிலிருந்து நான்கு விநாடிகளாக இருக்க வேண்டும். அடிவயிற்று தசைகளை பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த பின் மூலபந்தத்தை செய்யவும். இதை ஆசனவாயை சுருக்கி செய்ய வேண்டும். அதே சமயம் நுரையீரலில் மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த மூச்சு நிறுத்துவதை ஜலாந்தர பந்தத்தின் மூலம் (முகத் தாடையை மார்பில் அழுத்தி) செய்ய வேண்டும். 10 (அ) 15 விநாடிகள் கும்பக நிலையில் மூச்சை நிறுத்த வேண்டும்.
3. நிதானமாக உஜ்யான பந்தாவை செய்து மூச்சை வெளியிட்டு பந்தங்களில் இருந்து வெளிவர வேண்டும். மூச்சை விடுவது 8 லிருந்து 10 விநாடிகள் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுவது இடது நாசி மூலம் செய்ய வேண்டும். அப்பொழுது வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – உஜ்ஜையினி பிராணாயாமத்தில் எப்பொழுதும் மூச்சை உள்ளிழுப்பது இரண்டு நாசிகளாலும், மூச்சை வெளிவிடுவது இடது நாசியால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
பலன்கள்
1. உஜ்ஜையினி பிராணயாமம் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிராணாயாமம் செய்வது நல்லது.
3. ஆஸ்துமா, இருமல் மற்ற சுவாச மண்டல கோளாறுகளுக்கு இந்த பிராணாயாமம் பலனளிக்கும்.
3. சூரிய பேதன பிராணாயாமா
சூரியா என்றால் சூரியன் பேதனா என்றால் திறப்பது.
செய்முறை
வஜ்ராசனம் போன்ற சௌகரியமான ஆசன நிலையில் உட்காரவும். இந்த ஆசனத்தில் நன்றாக முழுமையாக மூச்சை வெளிவிட வேண்டும். பிறகு இடது நாசியை இடது கை கட்டை விரலால் மூடிக் கொண்டு வலது நாசியால் மூச்சை உள்ளிழுக்கவும். உள்ளிழுப்பது முடிந்தவுடன் மூல, ஜலாந்தர பந்தங்களை செய்யவும். இவற்றை செய்யும் பொழுது வலது நாசியை இடது கையில் நடுவிரலால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் மூச்சு நிலைபெற்றிருக்கும். 15 லிருந்து 20 விநாடிகள் மூச்சை நிலை நிறுத்தினால் போதுமானது. மெதுவாக பந்தங்களை விடுவிக்கவும். பிறகு வலது நாசி வழியாக 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி இந்த சுழற்சியை 10 முறை செய்யவும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமத்தில் உடலின் உஷ்ண நிலை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நரம்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சீராக வைக்கப்படுகின்றன.
2. ஜலதோஷம், தலைவலி, தொண்டைவலி முதலிய சுவாச மண்டல கோளாறுகள் குணமாகின்றன.
4. சந்திர பேதன பிராணாயாமா
சந்திர என்பது சந்திரனைக் குறிக்கிறது. பேதனா என்றால் திறப்பது என்று பொருள். இந்த பிராணாயாமத்தில் உடல் உஷ்ணம் குறைக்கப்படுகிறது. சந்திரன் குளிர்ச்சியை குறிப்பதால் இந்த பிராணாயாமம் சந்திர பேதன பிராணாயாமம் எனப்படுகிறது.
செய்முறை
1. வஜ்ராசனம் போன்ற உட்காரும் யோகாசன நிலையில் சவுகரியமாக அமரவும்.
2. வலது நாசியை மூடிக் கொண்டு 4 லிருந்து 5 நொடிகள் இடது நாசி மூலம் மூச்சை உள்ளிழுக்கவும். கும்பகத்தை 10 லிருந்து 15 விநாடிகள் பந்தங்கள் மூலம்  செய்யவும். செய்யும் பொழுது இடது நாசியை மூடிக் கொள்ளவும்.
3. பந்தங்களை விடுவிக்கவும். இடது நாசியால் 6 லிருந்து 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி. இதை 5 லிருந்து 10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமம் உடலின் அதீத உஷ்ணத்தை எடுத்து விடுவதால் கண்ணெரிச்சல், மூக்கில் ரத்தம் வருதல் முதலியன குணமாக்கப்படும்.
2. உடல் உஷ்ணத்தால் முடி உதிர்தல், இதர சரும நோய்கள் குணமாகும்.
3. உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு வியாதிகள் குணமாகும்.
மறுபடியும் சொல்கின்றோம், பிராணாயாமம் நன்கு தேர்ந்த யோகாசன
குருவிடம் கற்றுக் கொண்ட பின்பே செய்ய வேண்டும். பிராணாயாமங்களின் பரிமாணம் அற்புதமானது. மூச்சு விடுதலை கட்டுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர். தற்போதைய ஆய்வுகள் மூச்சு விடும் சுழற்சிகள் ஒரு நிமிடத்தில் 16 லிருந்து 20 தடவை நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. உறங்கும் போது இந்த எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 10 லிருந்து 12 சுழற்சிகளாக குறைகிறது. இதுவே ஆழ்நிலை தியானத்தின் போது ஒரு நிமிடத்தில் 4 லிருந்து 6 சுழற்சிகளாக குறைந்து விடுகிறது! பிராணாயாமமும் தியானமும் நெருங்கிய தொடர்புடையவை.
பிராணாயாமம், மூச்சை, கட்டுப்படுத்தும், கலை,
உணவு, மூச்சு, ஆக்ஸிஜன், யோகாவின், பிராணாயாமம், உயிர், மூச்சு, உடலின்,
நுரையீரலை, மார்பு, ரத்தக், குழாய்கள், அல்வியோலி, பிராண, சக்தி, உலகில்,
தலை, இரத்த, ஒட்டத்தையும், கழுத்து, தொண்டை, உடலிலுள்ள, முதுகுத், தண்டின், பாராசிம்பதெடிக், நர்வுஸ், டையாஃபர்ம், ஜீரண, சக்தி, உடலின், ரத்த, சுழற்சி, நரம்புகள், மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின், உடலுறுப்புகள்,
காக்காய், வலிப்பு, நோய், டாக்டரிடம், பிராணாயாமத்தின், உடலை,
நுரையீரலிலுள்ள, நரம்பு, மண்டலத்தை, உயர், ரத்த, அழுத்தம், ஆஸ்துமா, இருமல், பிராணாயாமம், உடலின், உஷ்ணத்தை, கண்ணெரிச்சல், மூக்கில், ரத்தம்,
பிராணாயாமம் – மூச்சைகட்டுப்படுத்தும் கலை
நம்மால் உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்க முடியும். ஆனால் சில நிமிடங்களுக்கு கூட மூச்சு விடாமல் இருக்க முடியாது. எல்லா ஜீவராசிகளும் சுவாசிக்கின்றன. காற்றை உள்ளிழுத்து அதன் ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன.
கி.மு. 5000 வது ஆண்டில் பதஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட அஷ்டாங்க (எட்டு வகை) யோகாவின் நாலாவது படி, பிராணாயாமம். இருதய நோய்க்கு உகந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதை முறைப்படி நல்ல ஆசானிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ‘பிராணா’ என்றால் உயிர் மூச்சு. ‘யாமா’ என்றால் ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்பாடு. உடலின் எல்லா வித அவயங்களும் சரியாக இயங்க தேவைப்படும் பிராண வாயுவை தருவது மூச்சு.
‘பிராணா (அ) பிராணன்’ என்ற வார்த்தை பல பொருள் கொண்டது பிராணன் என்றால் உயிர் – உயிர்சத்தி, காற்று, வாயு, பிரபஞ்ச சத்தி, சுவாசம், மூச்சு என்று பல பொருள் கூறலாம்.
நாசி வழியே உள்ளிழுக்கப்படும் காற்று, நுரையீரலை சென்று அடைகிறது. மார்பு விரிவடைந்து, ரத்தக்குழாய்கள் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. நுரையீரலில் “அல்வியோலி” (கிறீஸ்மீஷீறீவீ) என்ற சிறிய, மெல்லிய கொத்துகளாக ஆயிரக்கணக்கான காற்றுப்பைகள் உள்ளன. ரத்தக்குழாய்களுக்கும், அல்வியோலிக்கும் நடுவே உள்ள ‘தடை சுவர்’ ஒரு மைக்ரான் தடிமன் தான்! ஒரு மைக்ரான் ஒரு சென்டி மீட்டரின் 10,000 த்தில் ஒரு பகுதி (1/10,000)! நாம் சுவாசித்த காற்றின் பிராண வாயுவை (ளிஜ்ஹ்ரீமீஸீ) ரத்த தந்துகிகளின் (மெல்லிய ரத்தக் குழாய்கள்) சிவப்பு அணுக்கள் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இரத்தத்தில் உள்ள கரியமில வாயு (சிணீக்ஷீதீஷீஸீ – பீவீ – ஷீஜ்வீபீமீ) காற்றுப்பைகளுக்கு சென்று, நாம் மூச்சு விடும் போது, மூக்கு வழியே வெளியேறுகிறது நுரையீரலில் ரத்த தந்துகிகளுக்கும், காற்றுப் பைகளுக்கும் காற்றுப் பரிமாணம் இவ்வாறு நடக்கிறது.
பிராண வாயு இன்றி நாம் உயிர் வாழ முடியாது. இந்த பிராண வாயுவை நாம் சுவாசத்தின் மூலமாக பெறுகிறோம். பிராண சக்தியின் உடலின் இயக்கம், அறிவு, ஆன்மீக வளர்ச்சிகளை ஊக்குவிக்கிறது. பிராணன் இல்லாவிடில் உலகில் ஒன்றுமே வாழ முடியாது. பிராணன் தான் ஜீவாத்மாவையும், பிரகிருதியையும் இணைக்கிறது. பிராணனே பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி.
மனித சரீரத்தில் பிராணன் சுவாசத்தை குறிக்கிறது. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியை கட்டுப்படுத்தியது போல் தான். மூச்சை கட்டுப்படுத்தினால் முனிவராகலாம்!
பிராணாயாமத்தை அறிந்து கொள்ளும் முன்பு, நாம் சொல் வழக்கில் “பஞ்சப் பிராணன்” என்று கூறும் ஐந்து வகை பிராணனைப் பார்ப்போம்.
1. பிராண வாயு
இருக்குமிடம் – தலைபணி – மூச்சு உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இரத்த ஒட்டத்தையும், சுவாசத்தையும் நடத்துகிறது. கேட்பது, சுவைப்பது, சிந்தனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், ரத்த ஒட்டம் இவற்றையெல்லாம் இயக்குவது.
2. உதான வாயு
இருக்குமிடம் – கழுத்து, தொண்டைபணி – தலையை நேராக வைப்பது, தும்முவது, ஏப்பம் விடுவது மற்றும் வாந்தி – இந்த இயக்கங்களை நடத்துகிறது.
3. வியான வாயு
இருக்குமிடம் – மார்புபணி – உடலிலுள்ள நாடிகளின் (நாளங்கள்) மூலம் சக்தி உடலெங்கும் பரவ உதவுகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிப்பது, நரம்புகளை கட்டுப்படுத்துவது, ரத்த சுழற்ச்சியை சீர் செய்வது, ஆக்சிஜனை கொண்டு செல்வது – இந்த பணிகளை நடத்துகிறது.4. சமான வாயு
இருக்குமிடம் – தொப்புள்பணி – வயிற்றில் பசி எடுக்கவும், சூடு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. பசி, தாகத்தை கன்ட்ரோல் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. 5. அபான வாயு
இருக்குமிடம் – அடிவயிறுபணி – குடல் பகுதிகளுக்கு கீழே இருக்கும் உறுப்புக்களின் இயக்கத்தை நடத்துகிறது. உடலின் கழிவுகளை கீழ்ப்புறமாக வெளியேத் தள்ளும்.
நாடிகள்
பிராண சக்தி எவ்வாறு நம் உடலில் பரவுகிறது?
நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000) உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை 10 நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை
1. இடை நாடிகள் – முதுகுத் தண்டின் இடது பாகத்தில் உள்ளது. இந்த இடை நாடி சந்திர நாடி என்று சொல்லப்படுகின்றது. நம் உடலுக்கு ஒய்வை தரும். ‘பாராசிம்பதெடிக் நர்வுஸ்’ (றிணீக்ஷீணீsஹ்னீஜீலீணீtலீமீtவீநீ ழிமீக்ஷீஸ்மீs) களை இயக்குவது சந்திர நாடி தான்.
2. பிங்கலை நாடி – இது முகுதுத் தண்டின் வலது பக்கத்தில் அமைந்திருக்கின்றது. இதை சூரிய நாடி என்பார்கள். நம் உடலை  சுறுசுறுப்பாக வைக்க காரணமான ‘சிம்பதெடிக் நர்வுஸ்’ தூண்டப்படுவது சூரிய நாடியால் தான்.
3. சூட்சும நாடி – முதுகுத் தண்டின் மத்தியில் அமைந்திருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு தெரியாத நாடி. பிராணாயாமத்தின் போது மூச்சை இழுப்பதும், விடுவதும் இடை பிங்கலை நாடிகளால் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவிலே, சூட்சும நாடி இயங்குகின்றது. அதாவது மூச்சை உள்ளிருத்தும் போது  சூட்சும நாடி இயங்க தொடங்குகின்றது. இந்த சக்தியை சில யோகிகள் குண்டலினி சக்தி என்கின்றனர்.
பந்தங்கள்
பந்தங்கள் என்றால் முடிச்சுகள் – ஒன்றையன்று சேர்ப்பவை. பந்தங்கள் பிராணயாமத்தின் முழுப் பலனை பெற உதவுகின்றன. பந்தங்கள் மூன்று வகைப்படும். இவை பிராணாயாம பயிற்சிகள்.
1. உத்தியான பந்தம் – உத்தியான என்றால் பறப்பது என்று பொருள். இந்த பந்தம் டையாஃபர்ம் (ஞிவீணீஜீலீக்ஷீணீரீணீனீ) இயக்கத்திற்கு உதவுகிறது.
2. ஜாலாந்தர பந்தம் – ஜாலா என்றால் வலை. சிலந்தி வலை என்று சொல்லலாம். இது பிராணாயாமத்துக்கு செய்யப்படும் பந்தம். இதில் முகத்தாடை, மார்பில் அமிழ்ந்து இருக்க வேண்டும்.
3. மூல பந்தம் – மூலம் என்றால் ஆரம்பம் அல்லது அடிவேர் என்று பொருள். இது ஆசன வாயுக்கும், விதைப்பைக்கும் நடுவில் இருக்கிறது. ஆசன வாயை சுருக்கி விரித்து செய்வது மூல பந்த பயிற்சியாகும்.
சக்கரங்கள்
இடை, பிங்கலை, சூஷ்ம மூன்று நாடிகளும் சேரும் சந்திப்புகள் சக்கரங்கள் எனப்படுகின்றன. பிரசித்தி பெற்ற யோகிகளும், ரிஷிகளும், சக்கரங்களின் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் மற்றும் தவம் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. உடலில் ஏழு முக்கியமான சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம் – முதுகுத் தண்டின் அடியில் இருப்பது.
2. சுவாதிஸ்தைய – இந்த சக்தி தொப்புளுக்கும், ஜனன உறுப்புகளுக்கும் நடுவில் உள்ளது.
3. மணி பூரகம் – தொப்புளில் இருப்பது.
4. ஆனந்த சக்கரம் – இதய பிரதேசத்தில் இருப்பது.
5. விசுதா – தொண்டையின் இருப்பிடம்.
6. அஸ்னா – இரு கண்ணிமைகளுக்கு நடுவில் இருப்பது.
7. சகஸ்ரார – சிரசில் அதாவது மூளையில் அமைந்துள்ளது.
பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்
• பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம் உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.
• தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம் நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.
• சுவாச இயக்கம் மேம்படும். மற்றும் சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.
• ஜீரண சக்தி மேம்படும். ஜீரண மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.
• உடலின் ரத்த சுழற்சி சீராகும் இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம் சீராகும்.
• உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
• மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும். ஆயுள் பெருகும்.
• ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பிராணாயாமம் செய்வதற்கு முன்பு
• நீங்கள் முதன் முறையாக பிராணயாமம் செய்வதாக இருந்தால் உங்கள் உணவில் கட்டுப்பாடு வேண்டும். எளிமையான, சுலபமாக ஜீரணிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் காபி, டீ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது அனுபவம் ஆன பின் நீங்கள் எதைவேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை உணவு சாத்திவீகமாக இருக்க வேண்டும். பசும்பால், பசுந்நெய், கோதுமை, சாறு செறிந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் இவற்றை அதிகமாக உண்ணலாம். சூடான மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
• பிராணாயாமத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு வரவேண்டும். விட்டு விட்டு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் நேரத்தை குறைத்து போகப் போக நேரத்தை அதிகரிக்கவும்.
• பிராணாயாமம் செய்யும் முன் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
• செய்யும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
• காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யும் முன் டாக்டரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
• காலை நேரம் பிராணாயாமம் செய்ய ஏற்றது. இது முடியாவிட்டால் சாயங்காலம் செய்யலாம்.
• பிராணாயாமத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பே பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
• குருவிடம் கற்றுக் கொள்ளாமல் பிராணாயாமத்தை செய்யக் கூடாது.
• பிராணாயாமம் செய்யும் முன் நாடிசுத்தி செய்ய வேண்டும் இதற்கு குரு தேவை.
பிராணாயாமத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை 1. மூச்சை உள்ளே இழுப்பது (பூரகம்)
2. மூச்சை அடக்குதல் (கும்பகம்)
3. மூச்சை வெளிவிடுதல் (ரேசகம்)
பூரகம், ரேசகம் நடுவில் மூச்சை அடக்கி ஒரு நிலையில் வைப்பது முக்கியமானது. மூச்சை உள்ளே இழுக்காமலும், வெளியே விடாமலும் ஒரு நிலையில் நிற்பது சுவாசத் தேவையை குறைக்கின்றது. வளர்சிதை மாற்றம் சீராகிறது. ஒரு வகையில் மூச்சை அடக்கிக் கொள்வது உடலுக்கு ஒய்வை தருகின்றது.
மேற்சொன்ன மூன்று பயிற்சிகளும், ஒவ்வொன்றும் ஒரே அளவு நேரத்தில் செய்ய வேண்டும். மூன்று நிலைகளும் சமமாக இருக்க வேண்டும். யோகா சொல்வது என்னவென்றால் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுப்பது சூட்டை உண்டாக்கும். அதே போல இடது நாசியால் மூச்சை இழுப்பது குளிர்வை உண்டாக்கும்.
பலருக்கு ஏற்படும் சந்தேகம் எவ்வளவு நேரம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அடக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் வெளிவிட வேண்டும். இதை தெரிந்து கொள்ள குருவை நாட வேண்டும். தவறுதலாக செய்தால் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; வேறு கோளாறுகளும் உண்டாகலாம்.
நாடிசுத்தி
கும்பக பயிற்சியில்லாமல் பூரகவும், ரேசகமும் செய்வது நாடிசுத்தி எனப்படும்.
• வஜ்ராசனம் அல்லது பத்மாசன நிலையில் உட்காரவும்.
• வலது கையின் நடு மற்றும் சுண்டு விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். இதர விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இதை நாசிக முத்திரை என்பார்கள்.
• இடது கையின் கட்டை விரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதை சின் முத்திரை என்பார்கள்.
• வலது கையின் கட்டை விரலால் உங்கள் வலது நாசியை மூடிக் கொள்ள வேண்டும். இடது நாசியின் மூலம் மூச்சை நன்கு உள்ளிழுக்கவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
• உடனடியாக வலது மூக்கை திறந்து விட்டு இடது நாசியை மோதிர விரல்களால் மூடிக் கொள்ளவும். வலது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும்.
• இப்பொழுது வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுத்து, இதை மூடி இடது நாசியின் மூலம் மூச்சை வெளியே விடவும். இதை மாற்றி மாற்றி 27 முறை செய்யவும்.
பிரணாயாமா முறைகளிலேயே பல வகைகள் உள்ளன. நாடிசுத்தி,கபாலபாதி, சூரிய பேதனா, சந்திர பேதனா, விலோமம், சீதளி, பிரதிலோமம் இத்யாதி வகைகளுள்ளன. தகுந்த குருவிடம் இவற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் அதன் செயல் முறைகளை குருவிடம் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும். பிராணாயாமத்தின் பல வகைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம். தொடரும்.
1. அனுலோமா – விலோமா பிராணாயாமா
செய்முறை
உட்காரும் யோகாசன நிலைகளில் எதில் வேண்டுமானாலும் உட்காரவும். உடலை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும். கைகளை முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளவும்.
1. இரண்டு நாசி துவாரங்களால் மூச்சை நிதானமாக, முழுமையாக வெளியிடவும்.
2. பிறகு உடனடியாக அடிவயிற்றுத் தசைகளை இயக்கி மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை உள்ளிழுக்கும் பொழுது எந்த சப்தமும் எழாமல் பார்த்துக் கொள்ளவும்.
3. பிறகு மூச்சை உடனே வெளியே விடவும். மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடாது.
2. உஜ்ஜை பிராணாயாமா
1. பத்மாசனம் (அ) வஜ்ராசனம் போன்ற உட்காரும் நிலை யோகாசனங்களில் உட்கார்ந்து கொள்ளவும்.
2. நுரையீரலிலுள்ள காற்றை இரண்டு நாசிகளின் வழியே வெளியே விட்டு பிறகு உள்ளிழுத்துக் கொள்ளவும். உள்ளிழுத்து கொள்ளும் நேரம் மூன்றிலிருந்து நான்கு விநாடிகளாக இருக்க வேண்டும். அடிவயிற்று தசைகளை பயன்படுத்தி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளிழுத்த பின் மூலபந்தத்தை செய்யவும். இதை ஆசனவாயை சுருக்கி செய்ய வேண்டும். அதே சமயம் நுரையீரலில் மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த மூச்சு நிறுத்துவதை ஜலாந்தர பந்தத்தின் மூலம் (முகத் தாடையை மார்பில் அழுத்தி) செய்ய வேண்டும். 10 (அ) 15 விநாடிகள் கும்பக நிலையில் மூச்சை நிறுத்த வேண்டும்.
3. நிதானமாக உஜ்யான பந்தாவை செய்து மூச்சை வெளியிட்டு பந்தங்களில் இருந்து வெளிவர வேண்டும். மூச்சை விடுவது 8 லிருந்து 10 விநாடிகள் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுவது இடது நாசி மூலம் செய்ய வேண்டும். அப்பொழுது வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடிக் கொள்ள வேண்டும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – உஜ்ஜையினி பிராணாயாமத்தில் எப்பொழுதும் மூச்சை உள்ளிழுப்பது இரண்டு நாசிகளாலும், மூச்சை வெளிவிடுவது இடது நாசியால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
பலன்கள் 1. உஜ்ஜையினி பிராணயாமம் நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிராணாயாமம் செய்வது நல்லது.
3. ஆஸ்துமா, இருமல் மற்ற சுவாச மண்டல கோளாறுகளுக்கு இந்த பிராணாயாமம் பலனளிக்கும்.
3. சூரிய பேதன பிராணாயாமா
சூரியா என்றால் சூரியன் பேதனா என்றால் திறப்பது.
செய்முறை
வஜ்ராசனம் போன்ற சௌகரியமான ஆசன நிலையில் உட்காரவும். இந்த ஆசனத்தில் நன்றாக முழுமையாக மூச்சை வெளிவிட வேண்டும். பிறகு இடது நாசியை இடது கை கட்டை விரலால் மூடிக் கொண்டு வலது நாசியால் மூச்சை உள்ளிழுக்கவும். உள்ளிழுப்பது முடிந்தவுடன் மூல, ஜலாந்தர பந்தங்களை செய்யவும். இவற்றை செய்யும் பொழுது வலது நாசியை இடது கையில் நடுவிரலால் மூடிக் கொள்ள வேண்டும். இதனால் மூச்சு நிலைபெற்றிருக்கும். 15 லிருந்து 20 விநாடிகள் மூச்சை நிலை நிறுத்தினால் போதுமானது. மெதுவாக பந்தங்களை விடுவிக்கவும். பிறகு வலது நாசி வழியாக 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி இந்த சுழற்சியை 10 முறை செய்யவும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமத்தில் உடலின் உஷ்ண நிலை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நரம்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சீராக வைக்கப்படுகின்றன.
2. ஜலதோஷம், தலைவலி, தொண்டைவலி முதலிய சுவாச மண்டல கோளாறுகள் குணமாகின்றன.
4. சந்திர பேதன பிராணாயாமா
சந்திர என்பது சந்திரனைக் குறிக்கிறது. பேதனா என்றால் திறப்பது என்று பொருள். இந்த பிராணாயாமத்தில் உடல் உஷ்ணம் குறைக்கப்படுகிறது. சந்திரன் குளிர்ச்சியை குறிப்பதால் இந்த பிராணாயாமம் சந்திர பேதன பிராணாயாமம் எனப்படுகிறது.
செய்முறை
1. வஜ்ராசனம் போன்ற உட்காரும் யோகாசன நிலையில் சவுகரியமாக அமரவும். 2. வலது நாசியை மூடிக் கொண்டு 4 லிருந்து 5 நொடிகள் இடது நாசி மூலம் மூச்சை உள்ளிழுக்கவும். கும்பகத்தை 10 லிருந்து 15 விநாடிகள் பந்தங்கள் மூலம்  செய்யவும். செய்யும் பொழுது இடது நாசியை மூடிக் கொள்ளவும்.3. பந்தங்களை விடுவிக்கவும். இடது நாசியால் 6 லிருந்து 8 விநாடிகள் மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுழற்சி. இதை 5 லிருந்து 10 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்
1. இந்த பிராணாயாமம் உடலின் அதீத உஷ்ணத்தை எடுத்து விடுவதால் கண்ணெரிச்சல், மூக்கில் ரத்தம் வருதல் முதலியன குணமாக்கப்படும். 2. உடல் உஷ்ணத்தால் முடி உதிர்தல், இதர சரும நோய்கள் குணமாகும். 3. உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு வியாதிகள் குணமாகும்.
மறுபடியும் சொல்கின்றோம், பிராணாயாமம் நன்கு தேர்ந்த யோகாசன குருவிடம் கற்றுக் கொண்ட பின்பே செய்ய வேண்டும். பிராணாயாமங்களின் பரிமாணம் அற்புதமானது. மூச்சு விடுதலை கட்டுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர். தற்போதைய ஆய்வுகள் மூச்சு விடும் சுழற்சிகள் ஒரு நிமிடத்தில் 16 லிருந்து 20 தடவை நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. உறங்கும் போது இந்த எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 10 லிருந்து 12 சுழற்சிகளாக குறைகிறது. இதுவே ஆழ்நிலை தியானத்தின் போது ஒரு நிமிடத்தில் 4 லிருந்து 6 சுழற்சிகளாக குறைந்து விடுகிறது! பிராணாயாமமும் தியானமும் நெருங்கிய தொடர்புடையவை.

மகராசனம்

மகரம் என்றால் முதலை. முதலை படுத்திருப்பதைப் போல் குப்புறப்படுத்து செய்ய வேண்டிய ஆசனம்.Post image for மகராசனம்

செய்முறை
1. தரை விரிப்பின் மேல் குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளவும். நெற்றி (முகம்) தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
2. கைகளை தலைக்கு மேல் நீட்டி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கால்களை நன்கு நீட்டிக் கொள்ளவும்.
3. மூச்சை உள்ளிழுத்து கைகளையும், கால்களையும் தரையிலிருந்து தூக்கவும். அவை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியே உடலின் எடையை தாங்கும்.
4. இந்த கைகள், கால்கள் தூக்கிய நிலையில் சாதாரணமாக மூச்சுவிட்டு சில நொடிகள் இருக்கவும்.
5. மூச்சை நிதானமாக வெளியிட்டு கை, கால்களை தரைக்கு இறக்கவும்.
பலன்கள்
1. சர்க்கரை நோய் (ஞிவீணீதீமீtமீs) க்கு ஏற்ற ஆசனம்.
2. சுரப்பிகள் சரிவர இயங்கும்.
3. கால், வயிறு, இடுப்பு போன்றவை பலம் பெறும். ஊளைச்சதை குறையும்.
4. மலச்சிக்கல், வயிற்று வலி தீரும்.
5. உடல் முழுவதும் இரத்த ஒட்டம் சீராக அமையும்.
6. பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
7. சுவாசப் பிரச்சனைகள் தீரும்.

ஆழ்நிலை தியானத்தின் ஆசான்

Post image for ஆழ்நிலை தியானத்தின் ஆசான்
உலகெங்கும் பரவலாக பயில்விக்கப்படும் யோகக்கலை “ஆழ்நிலை தியானம்” எனும் Transcendental Meditatior (T.M.) இதன் செயல் முறையை எளிமையாக செய்யக்கூடிய மந்திர ஜபமாக மாற்றி உலகப்புகழ் பெறுமாறு வளர்த்தவர் மகரிஷி மகேஷ் யோகி (1917 – 2008) 
அவரால் 1955 ல் ஆழ்நிலை தியானம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ல் மகரிஷி உலக சுற்றுப்பயணம் செய்து இந்த தியான முறையை பரப்பினார். 1959 ல் அவர் ‘அகில உலக தியானஸ்தாபனம்’ என்ற அமைப்பை துவங்கி, 1961 லிருந்து ஆழ்நிலை தியானத்தை பயில்விக்க, பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். வேகமாக பரவிய ஆழ்நிலை தியானம் குறிப்பாக அமெரிக்கர்களை மிகவும் கவர்ந்தது. 1998 ல் மகரிஷியின் ஸ்தாபனத்தால் 1000 பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. 40 லட்ச ஜனங்கள் இந்த தியான முறை கற்றனர். மகரிஷியின் ஸ்தாபனத்தின் சொத்துக்கள் / பண இருப்பு – 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு பில்லியன் என்றால் இலட்சம் கோடி!
ஆழ்நிலை தியானம் பிரசித்த பெற்ற யோக முறை மட்டுமல்ல. மிக அதிகமாக ஆராய்ச்சிகள் நடத்தப்பெற்ற தியான முறையாகும். பல ஆய்வுகள் இதனால் குறிப்பிடும்படியான பயன் ஏதுமில்லை, தவிர மற்ற தியான முறைகளை விட இது சிறந்ததல்ல என்கின்றன. ஏனைய ஆய்வுகள் ஆழ்நிலை தியான மந்திரங்களால் பலனுண்டு என்கின்றனர்.
பலன்கள்
மந்திர சர்ச்சைகள்
ஆழ்நிலை தியானத்தின் தனிச் சிறப்பே அதில் சொல்லித்தரப்படும் மந்திரங்கள் தான். இந்த மந்திரங்களின் மகிமை, உபயோகம் இவற்றை மகரிஷி மகஷ்யோகி பல வருடங்கள் தனது குருவான பிரும்மானந்த சரஸ்வதி அவர் பயின்றார். இந்த யோக மந்திர பண்டிதர்கள், ஆழ்நிலை தியான மந்திரங்கள் “தாந்திரீக சாஸ்திரத்திலிருந்து” எடுக்கப்பட்டவை என்கின்றனர். ஆழ்நிலை தியான மந்திரங்கள் மிகவும் ஜாக்கிரதையாக, பயிற்சி பெறுபவரின் மன, உடல் ஆரோக்கியம், வயது, பிரச்சனைகள் முதலியவற்றுக்கு ஏற்ற மாதிரி சொல்லித்தரப்படுகின்றன. மந்திரங்கள் இனிமையான த்வனி, நாதத்துடன் இருக்கும்.
செய்முறை
• ஆழ்நிலை தியான ம் ஏழு படிகள் கொண்ட பயிற்சி.
• முதல் இரண்டு படிகளில் ஆழ்நிலை தியானம் அறிமுகப்படுத்தப்படும்.
• மூன்றாவது நிலையில் பயிற்சி பெறுபவருடன் பிரத்யேக தனியான பேட்டி, முக்கிய அங்கமான “மந்திரம்” சொல்லித்தரப்படும்.
• பிறகு அடுத்தடுத்த நாட்களில் நான்கு (தினமும் 2 மணி நேரம்) தடவைகளில் தியான முறை விரிவாக கற்றுத்தரப்படும்.
• கற்றுத் தருவதற்கு முன் ஆசிரியரால் “பூஜை” செய்து இறை வணக்கம் செய்யப்படும்.
• 5, 6, 7 நாட்களில் பயிற்சி பெற்றவர், சரியாக தியானம் செய்கிறார் என்பது பரீட்சிக்கப்படும்.
கற்ற பின், தினமும் காலை, மாலை இரு வேளைகளில் 15 லிருந்து 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
ஆழ்நிலை தியானத்தை மகரிஷியின் அங்கீகரிக்கப்பட்ட ஆழ்நிலை தியான பயிற்சி மையங்களில் தான் கற்க இயலும்.

ஆழ்நிலை தியானம்

ஆழ்நிலை தியானம் என்ற பெயரைக் கேட்டதுமே 1960 களிலும், 70 களிலும் பிரபலமாக இருந்த தாடி வளர்த்த பீட்டில்ஸ்களும், பெல் – பாட்டம் ட்ரவுசர்களும், போதை மருந்துகளும் நம் நினைவில் வலம் வரக்கூடும்.
ஆனால் இவையெல்லாம் தற்போது அடங்கிவிட்ட நிலையில் டி.எம் மட்டும் நின்று நிலைபெற்று விட்டது. இன்று இன்று உலகமெங்கும் சுமார் 60 லட்சம் இதைப் பயின்று பயன்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டும் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
ஸென் என்றும், தய் சூச்சுஹான் என்றும், அய்கிடோ என்றும் பல தியான முறைகள் இருந்த போதிலும், டி.எம் எனப்படும் இந்த ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. இன்றையளவில் டி.எம் சமயச் சார்புடைய நிலையிலிருந்து மாறி, மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத் தோற்றுவித்துப் பிரபலப்படுத்தியவர்களின் எண்ணமும், இலக்கும் எதுவாக இருப்பினும் இது பற்றி அவர்கள் நடத்திய ஆய்வுகள் பாராட்டிற்குரியவை. ஏறத்தாழ 500 ஆய்வுகள் நடத்தப் பெற்று அறிக்கைகள் வெளியிடப்பெற்றுள்ளன. இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏனோ தானோ வென்று எடுபிபிகள் சிலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் அல்ல இவை. அறிவியலாராலும், அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற அறிவியல் மற்றும் மருத்துவ இதழ்களால் நடத்தப் பெற்றவை இவை.
பரபரப்பு, பற்றார்வம், மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும். ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்திக் கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது. ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனிதனை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.
‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.
தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன. இந்து சமயத்தினரின் யோக முறையும் கிறிஸ்தவ சமயத்தினரின் ஜெபமுறை வழிபாடும் தியானம் பயிலுவதற்குச் சிறந்த வழியாக அமைகின்றன.
இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரம் சொல்லித்தரப்படுகிறது. இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்.
பயிற்சி பெறுபவர்களுக்கு சொல்லித் தரப்படும் மந்திரங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறும். வேதங்களிலிருந்து மந்திரங்கள் எடுக்கப்படுவதால் அவற்றின் தொனி, அதிர்வுகள் செவிக்கு இனிமையாக இருக்கும். எந்த வயதினவரும், மத வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஆழ்நிலை தியானத்தை செய்யலாம்.
முதன் முதலாக, தியானம், குறிப்பாக ஆழ்நிலை தியானத்தைப் பற்றி விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆழ்நிலை தியானத்தின் போது பிராணவாயுவின் (ஆக்சிஜன்) தேவை குறைந்தது. இதனால் நல்ல ஒய்வு கிடைத்தது. 20 மாதம் ஆழ்நிலை தியானத்தை மேற்கொண்ட 1862 பயிற்சியாளர்கள் ஆராய்ந்ததில் அவர்களின் மதுபான உபயோகம், புகைபிடிப்பது, கணிசமாக குறைந்திருந்தது ஆழ்நிலை தியானம். பயிற்சியாளர்களின் வேலைத் திறனை மேம்படுத்தும்.